56
நிலவரி விதிப்பவனேயாயினும், இயற்கைச் சூழ்நிலை போலும் காரணங்களால், நிலத்துக்குரியவர் வரி செலுத்த இயலாதபோது, வரி தண்டுவதைக் கைவிடும் நல்லரசனுமாவான்.59
குளமுற்றத்தான், கொற்றம், கொடைவளம், மிக்கவன் ஆதலோடு, தன் ஒத்த, ஏன் தன்னினும் மிக்க, கொடையாளியைப் பாராட்டிப்பாடும் பேருள்ளம் வாய்ந்த பெரும்புலவனும் ஆவன். சிறுகுடி கிழான் பண்ணன் எனும் கொடையாளியை அவன் என் வாழ்நாளையும் தன்வாழ்நாளாகக் கொண்டு நெடுது வாழ்க" என வாழ்த்தியுள்ளான்.60
கோப்பெருஞ்சோழன்
உறையூரைத் தலைககராகக் கொண்டு அரசாண்ட சோழ அரசர்களுள் கோப்பெருஞ்சோழனும் ஒருவன். அவனைப் பாடிய புலவர்கள், பிசிராந்தையார், புல்லாற்றுார் எயிற்றியனார், பொத்தியார், கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதநாகனார், கண்ணகனார் ஆகியோராவர். பிசிராந்தையார் அவனைப் "பெருங்கோக் கிள்ளி61 "கோழியோன்" "கோப்பெருங் சோழன்"62 என்றும் பொத்தியார், "தேர்வண் கிள்ளி"64 என்றும் அழைத்துள்ளனர்.
புல்லாற்றுார் எயிற்றினார், சோழன், யாது காரணத்தாலோ, அவன் மக்கள் மீதே போர் தொடுத்து எழக்கண்டு, அவனை அணுகி "அவர்கள் உன் மக்கள், பின்னர் இவ்வாட்சிக்கு உரியவர், வென்று அவர்களை அழித்து விட்ட பின்னர், உனக்குப் பின் இந்த