57
அரசாட்சியை யார்பால் ஒப்படைப்பாய்" என்பன போலும் அறிவுரைகளைக் கூறி, அப்போர் நிகழாமல் இருக்கவும், மக்கள் மேலேயே போர் தொடுத்தான் என்ற பழி, இவனை அண்டாதிருக்கவும் வழி செய்தார்.64
மக்கள் மேல் போர் தொடுத்து எழுந்ததைப் புலவர் புல்லாற்றுாரார் அறிவுரை கேட்டு கைவிட்டான் என்றாலும், தன் செயலுக்கும், அத்தகைய மக்களைப் பெற்று விட்டமைக்கும் நாணி உயிர்விடத் துணிந்து விட்டான். துணிந்த அவன் அக்கால வழக்கப்படி வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு விட்டான். அப்போது என் நண்பர் பிசிராந்தையார் வருவார். அவர்க்கும் ஓர் இடம் ஒதுக்கி வைக்குமாறு உடன் இருந்தாரை வேண்டிக் கொண்டான். அவன் பிரிவு பொறாது தாமும் வடக்கிருந்து உயிர் துறக்க முன்வந்த பொத்தியார் என்ற புலவரைத் தங்களுக்கு மகன் பிறக்க இருக்கின்றான். பிறந்த பிறகு வருக என வேண்டி விடை கொடுத்து அனுப்பி உயிர் துறந்தான் 65 பாடிய புலவர் அனைவரும் அவன் கொடைவளத்தைப் பலபடப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கோப்பெருஞ் சோழன், புலவர்களைப் புரக்கும் புரவலன் ஆதலோடு, அவனும் ஒரு புலவன் ஆவன். அவன் பாடிய பாடல்களாகக் குறுந்தொகையில்66 இரண்டும், புறநானுாற்றில்67 மூன்றும் ஆக ஐந்து பாடல்கள் உள்ளன. அவையெல்லாம், நல்ல அறம் வழங்கும் சிறப்புடையன.