பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

 பெரும்பூண் சென்னி என்ற சோழ வேந்தன் கணையன் என்ற சேரவேந்தனுக்குரிய கழுமலக் கோட்டையை முற்றுகையிட்டபோது, அவன் படைத் தலைவன் பழையன் என்பவன், அக்கோட்டைக் காத்து நின்ற நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி; புன்துறை போன்ற படைத்தலைவர்களைக் கொன்று தானும் இறந்து விட, சோழனே களம் புகுந்து கழுமலக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டு கணையனையும் சிறை கொண்டான் எனக் கூறுகிறார், குடவாயில் கீரத்தனார் என்ற புலவர்.70

திருவானைக்காவல் நாவல் மரத்தடியில் இருக்கும் சிவனை வழிபடும் சிலந்தி; அச்சிவன் மீது இலை முதலாயின எதுவும் விழாமைக்காக வலைபின்னி வழிபட்டு வந்தது. அச்சிலந்தி போலவே, அவ்விறைவனை வழிபடும் யானை, சிவன் மீது வலை இருப்பது பொறாது அழித்தது. இது தொடர்ந்தது. அதனால் சினம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையுள் புகுந்து துயர் விளைக்கலாயிற்று. துயர் பொறாது, யானை துதிக்கையை ஓங்கி அடிக்க சிலந்தியும் இறந்தது; யானையும் இறந்தது. இறந்த சிலந்தி செங்கணனாகப் பிறந்து சிவனுக்கு எழுபது கோயில்களைக் கட்டிற்று என்ற கதையைச் சேக்கிழார் கூறியுள்ளார். அச்செங்கணான், சம்பந்தர், சுந்தரர், திருமங்கைஆழ்வார் பெருமக்களால் பாராட்டப் பெற்றான்.

ஆக, புறநானூற்று (74) கொளுகூறும் செங்கணான்; களவழி நாற்பது போல்வன கூறும் செங்கணான்; குடவாயிற் கீரத்தனார் கூறும் (புறம்:44) செங்கணான், சேக்கிழார் கூறும் செங்கணான் எனச் செங்கணான் என்ற பெயர் உடையார் நால்வர் இருக்-