64
கைவிடுக" என அறிவுரை கூறவும்.81 நலங்கிள்ளி கேளாது உறையூர்க்கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான்.
நலங்கிள்ளி, தொடக்கத்தில் கூறியவாறு தானே புலவன் ஆனதோடு (புறம் : 73,75) புலவர்கள் போற்றும் புரவலனும் ஆவன். கோவூர்கிழாரே அல்லாமல், உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும், அவன் கொற்றம், கொடை நலங்களைப் பாராட்டியதோடு, அவனுக்கு நல்ல பல அறிவுரைகளையும் வழங்கினார்.82
நெடுங்கிள்ளி
ஆவூர்க்கோட்டைக்கு உரியவன், இந்நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, அவ்வாவூர்க்கோட்டையை வளைத்துக் கொண்ட போது, கோவூர்கிழார் அறிவுரை கேட்டு, ஆவூர்க்கோட்டையை, நலங்கிள்ளிபால் ஒப்படைத்துவிட்டு, உறையூர்க்கோட்டைக்கு ஓடிவிட்டவன்.83 (புறம் : 44)
உறையூர்க்கோட்டையில் இருந்த போது, நலங்கிள்ளியைப் பாடிப் பரிசில் பெற்றுக் கொண்ட இளம் தத்தன் என்ற புலவன், நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் இருக்கும் பகை தெரியாத காரணத்தால், நெடுங்கிள்ளிபால் பரிசில் பெற உறையூர் சென்றான். வந்த புலவன் நலங்கிள்ளியிடமிருந்து வருகின்றான் என்பது அறியவே, அவனை, நலங்கிள்ளி, உறையூர்க் கோட்டையின் படை வலிவு அறிந்து வர அனுப்பிய ஒற்றனாகக் கொண்டு; நெடுங்கிள்ளி, அவனைச் சிறையில் அடைத்துக்