உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


மாவளத்தான்

நலங்கிள்ளியின் தம்பி. புலவர் தாமல் பல் கண்ணனாருடன் வட்டாடியிருந்த போது,வட்டொன்று காணாமல் போக, அதைப் புலவர்தாம் மறைத்து விட்டார் என எண்ணிச் சினங்கொண்டு, வட்டினாலேயே புலவரைத் தாக்க, புலவர் புண் பெற்றார். சிறிது நாழிகைக்கெல்லாம், மறைந்துபோன வட்டு காணக் கிடைக்கவே, தவறு செய்தவர் புலவர் அல்லர். தானே என்பதுணர்ந்து, வருந்தி புலவர்பால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.88

புலவரை மதிக்கும் இவன் தானும் ஒரு புலவர் ஆவன், இவன் பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம் பெற்றுளது. 89

முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி

வளம்மிக்க நாடுடையான், நல்ல வீரன், நாற்படை உடையான், அதனால் செருக்குற்று, அத்துவஞ் சேரலுக்கு உரிய கருவூரை முற்றுகையிட்டான். ஒரு நாள், அவன் ஏறி இருந்த யானை, மதம் கொண்டு சோழர் படையணியைக் கடந்து, சேரர் படை அணியுள் புகுந்துவிட்டது. கருவூர் வேண்மாடத்தில் அந்துவஞ் சேரலோடு அமர்ந்திருந்த புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்; "மதங்கொண்ட யானை மீது பகைப் படையுள் தனித்து நுழைந்துவிட்ட சோழன்,