68
தீங்கேதுமின்றித் திரும்ப வழிசெய்க" என, அந்துவஞ் சேரல் இருப்பொறையை வேண்டிக் கொண்டார். இவன் வரலாறாக அறியத் தக்கது இவ்வளவே.90
வேல் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி
இவனைப் பாடிய புலவர்கள், பரணரும், (புறம் 63) கழாத்தலையாரும் ஆவர் (புறம் : 62, 368) இருவரும் இவன், அவன்காலத்தில் சேரநாடாண்டிருந்த குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப்பெறும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனோடு, சோழநாட்டுத் திருப்போர்ப்புறம் எனும் இடத்தில் போரிட்டு அவனையும் கொன்று தானும் உயிர் இழந்து போனான். புலவர் இருவரும், மன்னர் இருவர் இறந்து வீழ்ந்த கொடுங்சாட்சி கண்டு கலங்கியுள்ளனர். ஆனால், பெயர் குறித்தார் அல்லர். முறையே "வேந்தர்", "மறப்போர் வேந்தர்" என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். பிற விளக்கம் கொளுவால் மட்டுமே அறியப்படும்.
காவல பாவலர்
நாடாண்ட காவலர்கள் இவர்களுக்குள்ளாக பாவன்மையும் கொண்டவர் நால்வர் உள்ளனர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சிறுகுடி கிழான்பண்ணனின் கொடை வளத்தைப் பாராட்டியுள்ளான்91 கோப்பெருஞ்சோழன், தலைமகள் ஒருத்தி-