உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69

 பால் உள்ளத்தைப் பறிகொடுத்த தலைமகன் கவலையால் உடல்நலம் கெடக்கண்டு, காரணம் யாது எனக் கேட்ட தன் நண்பனுக்கு விடைகூறியதாக அமைந்த பாடல் ஒன்றையும்92,தலைமகள், அன்பையும், அருளையும், மறந்து பொருள் தேடிச் செல்லத் துணிந்து விட்ட காதலன் செயல் கண்டு வருந்தும் பாடல் ஒன்றையும்93 குறுந்தொகையில் பாடியுள்ளான். தன் நண்பர் பிசிராந்தையார் பெருமை பாராட்டி மூன்று94 (214, 215, 216) பாடல்களைப் புறநானூற்றில் பாடியுள்ளான். நலங்கிள்ளி, தன் பெருமை, படைப் பெருமைகளைப் பாராட்டி வஞ்சினம் கூறும் இரு பாடல்களை (73, 75) புறநானுாற்றில் பாடியுள்ளார்.95 மாவளத்தான், தலைவன் பிரிவறிந்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழியின் கூற்றமைந்த பாடலைப் பாடியுள்ளார்.96

நல்லுருத்திரன்

நல்லுருத்திரன் பாடியதாகத் தொகுக்கப் பெற்று இருக்கும் புறநானூற்றுப் பாட்டின்97 கொளுவும், கலித்தொகைப் பாடல்களைப் பாடிய ஆசிரியர்களின் பெயரை அறிவிக்கும், கலித்தொகையில் உள்ள வெண்பாவிலும், இவன் பெயர்க்கு முன்னால் சோழன் என்ற சொல்லை இணைத்திருப்பதால், இவன் சோழர் குலத்து வந்தவன் என்பதை மட்டும் அறியமுடிகிறது; இவன் வரலாறாகப் பிற எதுவும் தெரியவில்லை. பொருள் இல்லா நிலையிலும் இழிந்தன செய்தாவது பொருள் ஈட்ட முயற்சிக்காதே என்கிறது அவன் புறப்பாட்டு.98 ஆயர் வாழ்க்கையை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகின்றன, அவனுடைய முல்லைக் கலிப்பாக்கள்.

5