உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

 தடாதகைப் பிராட்டியாரை மணம் செய்து கொடுத்த மலையத்துவசன், என்று பாண்டியர், ஐவர் வரலாறு அடிப்படைச் சான்றுகள் இல்லமலே கூறப்பட்டுள்ளது.1

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்

தமிழகத்தை வென்று கைக்கொள்ள எண்ணி வந்த வடநாட்டு ஆரியப்படையை வென்றவன். பொற்கொல்லன் சொல் கேட்டு, கோவலனைக் கள்வன் எனக் குற்றம். சாட்டிக் கொன்றுவிடக் கண்ணகியால் கோவலன் குற்றம் அற்றவன் என் அறிந்ததுமே அரியணை மீதே உயிர் விட்டவன்; கணவன் துறக்கக் கண்டதுமே, உயிர்விட்ட நல்லாளை மனைவியாகப் பெற்ற மாண்புடையான் இவன். 2 கல்வியின் நலத்தை நாட்டவர்க்கு எடுத்துரைத்த, நல்ல புலவனுமாவன்.3

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இவளைப் பாடிய புலவர்கள் ஆவூர் மூலங்கிழார்,4 காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்,5 நக்கீரர்6, மருதன் இளநாகனார்7, வடமவண்ணக்கன் பேரி சாத்தனார்8 ஆகிய ஐவர் ஆயினும், அவன் வரலாறு உரைத்தார் யாரும் இலர். அவர் பாடல்கள் எல்லாம், அவன் கொற்றம், கொடைவளம்; கொடுப்பதைக் காலத்தே கொடுக்காதகுறை போன்றவற்றைப் பொதுவாகவே பாடியுள்ளன.