பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஒல்லையூர், சோழ நாட்டு ஒலியமங்கலம், அல்லது கோனாட்டு ஒலியமங்கலம் எனக் கருதப்படுகிறது. புறநானுற்று அடிக்குறிப்பில் பூதப் பாண்டியன் ஒல்லையூரை வென்ற நிகழ்ச்சி எதுவும் கூறப்படவில்லை. இவன் பாடிய பாட்டில், மாவன், ஆந்தை அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் ஆகியோர் இவன் நண்பர்கள் என்பதும், மேற்கொண்ட போரில் வெற்றிக் கொள்ளத் தவறின் நண்பர்களாதிய இவர்களை இழக்கக்கடவேன்;என் மனைவியைப் பிரியக் கடவேன்" எனச் சூளுரைத்ததகாக மட்டுமே அறியக் அறியக்கிடக்கிறது.9 அவன் மனைவியின் பாடலாம் புறம் 246, மதுரைப் பேராலவாயர் பாடலாம் புறம்-247 ஆகிய பாடல்கள் மூலம், இவன் எவ்வாறோ மாண்டு போக, அவனை விட்டு உயிர் வாழ விரும்பா அவன் மனைவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்ந்து உயிர் விட்டாள் என்பதும் அறியக்கிடக்கிறது.

கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி

இவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த்தலையார் ஒருவரே, பாடிய பாட்டும் ஒன்றே.10 அதில், அவன் ஆற்றல், அவன் நாற்படைப்பெருமை, அவன் கொடை நலம் ஆகியன பொதுவாகவே பாராட்டப்பெற்றுள்ளன.

கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி

காளையார் கோயில் என வழங்கும் கானப்பேர் என்ற இடத்தில் வேங்கை மார்பன்-ஒரு வீரன், காவற் காடுகளும், சிற்றரண்கள் பலவும் சுற்றியிருக்க, அழிக்கலாகா அரண் ஒன்றை அமைத்திருந்தான்.தன்நாட்டின்