83
கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி :
இவனைப் பாடிய புலவர்கள், ஐயூர் முடவனாரும் (புறம் : 51) மருதன் இளநாகனாரும்(52) ஆவர். இவர்கள், இவனை முறையே "வழுதி" என்றும்,15 "இயல்தேர் வழுதி" 16 என்றும் அழைத்துள்ளனர். இவன் கூடகாரத்தில் துஞ்சினான் என்பது கொளுவால் தான் தெரிகிறது. அக்கூடகாரம் எங்கே இருக்கிறது. அங்குத் துஞ்சக் காரணம் யாது என்பன விளங்கவில்லை. இவன், தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்பதைப் பொறுத்துக்கொள்ளாதவன், பணிந்த அரசர் வாழ்வர். பணியாத நாடு, பாழுற்றுப் போகும் எனப் பொதுப்படையாகவே, இவன் பாராட்டப் பெற்றுள்ளான்.
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் :
இவனைப் பாடிய புலவர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார்(புறம் :59) அவர் இவனைத்"தகை மாண்வழுதி" என்று மட்டுமே அழைத்துள்ளார்.17 சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்பது கொளுவால் மட்டுமே அறியப்படுகிறது. பகைவர்க்கு ஞாயிற்றின் வெப்பம் போல் கொடியவன், புலவர், இரவலர்களுக்கு, திங்களின் தண்ணொளிபோல் இனியன் என அவன் கொற்றம் கொடைகள் பொது வகையாகவே பாராட்டப் பெற்றுள்ளன.