85
பறந்தலை களத்தே பகைவர்களை முறியடித்தான்32 யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சிறைபட்டான். புறங்காட்டி ஓடிய பகைவர்தம் போர் முரசுகள் செழியன் கைப்பட்டன.33
சேரன் சிறைப் பட்டானாகவே, பகைவர் படை சோணாடு நோக்கி ஓடலாயிற்று. சோணாட்டுப் புக்க செழியன், தஞ்சை மாவட்டத்து ஆலங்கானம் எனுமிடத்தே அவ்வரசர், படை அனைத்தையும் அழித்து, அவர்தம் முரசு, குடை பொருள் முதலாம் வளம் அனைத்தையும் கொண்டு மீண்டான். அவ் வெற்றிச் சிறப்பினை அவன் பெயரோடு இணைத்துத் "தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்" என புகழ் பெற்றறான்.34
சிறை பிடிக்கப் பெற்ற சேரன், சிறை பிழைத்துச் சென்று விட்டான் என்பதை அறிந்து. பெரும்படையுடன் சேரநாடு சென்றான். முசிறிநகரை முற்றி வளைத்து, யானைப்படையை அழித்து, அவ்வெற்றி விளங்க பொற்பாவை யொன்றையும் கவர்ந்து மீண்டான்35.
தமிழரசர் அனைவருக்கும் தொல்லை விளைக்கும் வல்வில் வாழ்வினரான கொங்கரை அழிக்கத் தன் படைத் தலைவருள் ஒருவனாய அதிகனை அனுப்பினான். வாகைப் பறந்தலை யிடத்தே கொங்கரை எதிர்த்த அதிகன் கொல்லப்பட்டான். செழியன் களம் சென்று கொங்கரை வென்று அவர்க்குரிய நாட்டைக் கைப்பற்றினான்.36
நீடுர்க் கண் இருந்து மிழலைக் கூற்றம் எனும் நாடாண்ட எவ்வி என்பானை வென்றான். அவ் வெற்றிக்குத் துணை நின்ற தன் வீரர்க்கு அரமண வாயிலை அடுத்த உரத்துாரில் பெருஞ்சோறளித்தான்.37
6