பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87

 பலவற்றை வெற்றி கொண்டவன் 46 முனிவர், முக்கண் செல்வனாம் சிவன் இவர்கள் முன் மட்டுமே இவன் தலை வணங்கும்; நான்மறை முனிவர்கள் வாழ்த்தும்போது மட்டுமே இவன் கை கூம்பும்; பகைநாட்டில் மூட்டிய தீயின் வெப்பத்தால் மட்டுமே இவன் மார்பு மாலை வாடும்; தன் மனைவியர் ஊடலைக் கண்ட அளவே இவன் சினம் இல்லாமல் போகும்47 பகைநாட்டு மீது போர் தொடுத்து எழுவதன் முன் அந்நாட்டுப் படைவீரர் அல்லார்க்கும், அந்நாட்டுப் பசுபோலும் உயிர்களுக்கும் கேடு நேராமை கருதி, "நான் போர் தொடுத்து வருகின்றேன், ஆகவே நீங்கள் எல்லாம் பாதுகாப்பான இடம் நாடிச் சென்று விடுங்கள்" என பறை அறைந்து அறிவித்துவிட்ட பின்னரே போர் தொடுப்பன் 48 பகை நாட்டில் வென்றுகொண்ட பொருட்களை எல்லாம், இரவலர்க்கே வழங்கிவிடுவேன்,49 வேள்விபல இயற்றியவன்50, என்ற இவை மட்டுமே. பகைவர் யார்? போரிட்ட போர்க்களங்கள் யாவை என்ற விளக்கம் எதுவும் இல்லை.

கி.பி. 765 முதல் 790 வரை அரசாண்டிருந்த நெடுஞ்சடையன், பராந்தக பாண்டியன், பி ற ப் பி த் த வேள்விக்குடி செப்பேடுகள், பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்த நால்வேத நெறியறிந்தவர்பால், வேதம் கற்ற, கொற்கை நற்கொற்றன், ஒரு வேள்வி எடுக்க, அவ் வேள்விக்கு வந்த இவன், அவ்வேள்வி நிகழ்ந்த ஊருக்கு வேள்விக்குடி எனப் பெயர்சூட்டி. நற்கொற்றனுக்குத் தானமாகக் கொடுத்தான் என்கிறது51