உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


முடத்திருமாறன்

தமிழ்ச்சங்கம் மூன்றனுள், இடைச்சங்கத்தின் இறுதியைக் கண்டு, கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தவன் இவன், குமரிநாடு, கடல்கோளால் அழிவுறுவதற்கு முன்னர், குமரி, தாம்பிரபரணி, ஆறுகளுக்கு இடையில் இருந்த குமரிநாட்டை ஆண்டவன். தலைநகர் கபாடபுரத்தில் இடைச்சங்கத்தை நிறுவிக் காத்த மன்னர்களில் ஒருவன். இவன் காலத்தில் நிகழ்ந்த பிறிதொரு கடல் கோளால், குமரி நாடும் அழிவுற்றுப் போக, இன்றைய மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டி நாடு கண்டவன். அங்கு மூன்றாம் சங்கத்தைக் கண்ட முதல்வன் இவன். இவ்வரலாற்றினைக் களவியல் உரை உணர்த்துகிறது. கடைச் சங்கம் கண்டு புலவர்களைப் பேணித் தமிழ் வாழத் துணை புரிந்ததோடு தானும் ஒரு புலவனாய்ப் பாடல் புனைந்தவன், இவன் பாடிய பாடல்கள் இரண்டு நற்றிணைக்கண் இடம் பெற்றுள்ளன.55


வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி :

இவனைப் பாடிய புலவர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ஒருவரே.56 (புறம்: 58),

ஆலின் பெருமரம் வீழ்ந்தபோது, அதன் விழுதுகள் தாங்குவதுபோல்; பாண்டியர் குலத்துக்கு நேர்ந்த கேட்டைப் போக்கியவன். பாண்டியர்க்கே உரிய முத்து, பொதிய மலைச் சந்தனம், வெற்றி, கொற்ற முரசுகளால் பெருமை கொண்டவன், இவை அனைத்தினும் மேலாக, ஏனைய மூவேந்தர்போல் அல்லாமல்,