பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

 தன் காலத்தே, சோழ நாட்டு அரியணையில் இருந்த, குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனுடன் நட்பு கொண்டிருந்தான். இவன் வரலாறாக அறியத்தக்கன இவ்வளவே.

வெற்றிவேற் செழியன்

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மகன். கொற்கையைத் தலைநகராகக் கொண்டு, தென்பாண்டி நாட்டைத் தந்தைக்குப் பதிலாக ஆண்டிருந்தவன், கோவலனை ஆராயாதே கொன்றுவிட்டது உணர்ந்து, தந்தை உயிர் விட்டதும், மதுரைக்கு வந்து மணிமுடி சூட்டிக்கொண்டவன்.57

பாண்டியநாடு மழைவளம் குறையவே, அது கண்ணகி நல்லாளுக்கு இழைத்த கொடுமையால் என உணர்ந்து, பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று விழா எடுக்க, மழைவளம் பெற்றது எனக் கூறுகிறது சிலப்பதிகார உரை பெறு கட்டுரை.

காவல பாவலர்

பாண்டியர் குலத்து வந்த புலவர்கள், பன்னிருவர் ஆவர். அவர்களுள், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்58ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்59 கானப் பேர் எயில் கடந்த உக்கிரப்பெருவழுதி 60 தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 61 முடத்திருமாறன், 62 ஆகிய ஐம்பெரும் புலவர் வரலாறு, அவர்கள் வரலாறு உரைத்தபோதே உரைக்கப்பட்டது.

ஏனைய எழுவர் வரலாறு பின் வருவன.