உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

 வார்க்குத் தம் உயிரையும் கொடுப்பர், பெருநிதியே எனினும், கையேந்திப் பெறார்; அத்தகையார் சிலர் இருப்பதால்தான், உலகம் இருக்கிறது என்ற பொருளமைந்த புறநானுற்றுப்பாடல் போற்றுதற்கு உரியது.75 பரிபாடலில் திருக்மாலின் திருகோலத்தை நன்கு காட்டி வழிபட்டுள்ளார்.76

5. குறுவழுதியார் :

அண்டர் மகன் குறுவழுதியார் வேறு; இவர் வேறு; "தலைவியை புறம்போகவிடாது,இற்செறித்துவிட்டாள் தாய்; ஆகவே, தலைவியைக் காணக், கடற்கரைக் கானச் சோலைக்கு வாரற்க; கடிதில் மணம் முடித்துக் கொள்" எனத் தலைவனை நோக்கி தோழி கூறியதாக அமைந்த பாடல் ஒன்றே, 77 இவர் பாடியது.

6. நல்வழுதி

நல்வழுதி பாடிய பாட்டு, பரிபாடல் ஒன்றே;78 என்றாலும், பிற ஆடவர்பால் மனம் செலுத்தாமையாம் கற்பு பெண்டிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது ஒன்றன்று; பிற பெண்டிர்பால், மனம் செலுத்தாமை யாம் கற்பு ஆடவர்க்கும் உண்டு. அது ஒருவன் செய்து விட்டால் "பிழையினை" என, அவனைக் கண்டிக்கும் உரிமையும் அவன் மனைவிக்கு உண்டு. அவளைத் தொழுது பிழை பொறுக்க வேண்டியவனுமாவன் கணவன், என்ற உயர்ந்த நெறியைக் காட்டியுள்ளார் .79