பக்கம்:தமிழக வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழக வரலாறு


பழையனுக்கு விரோதமானார்கள் என்றோ, அவர்கள் பொருட்டு மோரியர் வந்து பழையனை அடக்கினார்கள் என்றோ கூறுவது பொருந்தாது என்கிறார். மதுரைக் காஞ்சி அடிகளைக் கொண்டு நண்பர் என்று காட்டுகின்றார் அவர்.

“பழையன் மோகூர் அவையகம் விளங்க
கான்மொழிக் கோசர் தோன்றி யன்ன’ (மதுரைக்-508-9)

என்ற மாங்குடி மருதனார் பாடிய அடிகள் அவருக்கு அரண் செய்கின்றன. உண்மைதான்; ஆனால், ஒன்றிய இரண்டு மன்னர்கள் என்றும் மாறுபடவில்லை என்றோ மாறுபட்ட இரண்டு வேந்தர்கள் ஒன்றினார் இல்லை என்றோ யார் கூறமுடியும்? ஒரே தலைமுறையில் இரண்டு பரம்பரைகள் எத்தனை முறை கலாம் விளைத்தும், நண்பாகியும் வாழ்வதை வரலாற்றில் காண்கின்றோம்! ஏன், இன்றைக்குங் கூட அரசியல் உலகில் நேற்று ஒன்றி வாழ்ந்தார் இன்று வேறுபட்டும், நேற்று வேறுபட்டார் இன்று சேர்ந்து வாழ்ந்தும் நிற்பதைக் காணவில்லையா? எனவே, ஒருகால் ஒன்றியிருந்த கோசரும் பழையனும் என்றும் மாறுபடவில்லை என்பதும், அவர்கள் வேற்றுமைக்கிடையில் மோரியர் வசவில்லை என்று கூறுவதும் பொருந்தாது. மற்றும் மாமூலனாருக்கும் மருதனாருக்கும் இடையில் முந்நூறு ஆண்டுகள் உள்ளனவே.

மேலும், தமிழ்ப்புலவர் வாக்கின்படி தமிழர்கள் மோரியர் விரோதிகளாகிய நந்தர்களுக்கு நல்ல நண்பர்களாய் இருந்திருக்கின்றார்கள். அதனாலேதான் அனைத்தினுக்கு மேலாக அந்த நந்தர்தம் செல்வத்தைப் புகழ்ந்துள்ளார்கள். அவர்கள் செல்வம் படை முதலிய சிறப்புகளையும் அவற்றைச் சந்திரகுப்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/104&oldid=1357829" இலிருந்து மீள்விக்கப்பட்டது