பக்கம்:தமிழக வரலாறு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

103


தவன் என்ற உண்மை மறுக்க முடியாததாகும். பிந்துசாரன் மகனே அசோகன். அவன் பரந்த நிலப்பரப்பை அன்பால் ஆண்டவன். வடக்கே காஷ்மீர் நாட்டு ஸ்ரீநகர் அவன் காலத்தில் தோன்றியது. அவனே தோற்றுவித்தவன். அவன் தென்னாட்டு எல்லையிலும் நெடுந்தொலைவு வந்துள்ளான். அவன் மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் சமயத்தைப் பரப்பிய வரலாறு நாடறிந்த ஒன்று. அசோகனும் பரந்த பாரத நாட்டைத் தமிழ் நாட்டு எல்லை வரையில் தன் ஆணையின் கீழ்க் கொண்டு வந்தானேனும், தமிழ்நாடு தன் உரிமை இழக்கா வகையில் அவனுடன் நட்புக் கொண்டு இருந்தது. அதனாலேயே அவனது பெளத்தம் அவனுடைய மக்களாலும் பிற அடியாராலும் தமிழகத்தில் பரவலாயிற்று எனலாம்[1]

கலிங்கப்போர் முடிந்த பின் அசோகன் காலத்தில் கி. மு. 206 க்குப் பின் அவன் தூதுவர்கள் தாமிரவருணி நதிக்கரையில் உள்ள கொற்கையிலும் கேரள நாட்டிலும் பிற விடங்களிலும் சமயம் வளர்த்தார்கள். இதைக் கொண்டே ஸ்மித்து, தென்னாட்டு வரலாற்றில் ஒரு தெளிவான மைல் கல்லைக் காண்கிறார். மேலை நாட்டுத் தூதுவரான மெகஸ்தனிஸ் பாண்டியர் ஆட்சியைப் பற்றிக் குறிக்கிறார். அசோகனுடைய கல்வெட்டுக்களிலுந் தமிழ்நாட்டு அரச பரம்பரைகள் குறிக்கப் பெறுகின்றன. சேர சோழ பாண்டியர் பெயர்களுடன் அசோகர் கல்வெட்டுக்கள் கேரள புத்திரர் என்ற பெயரையும் குறிக்கின்றன. கேரளம் சேர நாட்டின் ஒரு பகுதியாகவோ, சேர நாடாகவோ இருக்க வேண்டும். அன்றி, ஸ்மித்துக் குறிப்பது போன்று பின் பாண்டி-


  1. The Early History of India By W. Smith, P. 75
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/107&oldid=1357752" இலிருந்து மீள்விக்கப்பட்டது