பக்கம்:தமிழக வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

107


பெளத்தமும் சமணமும் இங்குக் கால்கொள்ள ஆரம்பித்தன என்பது தேற்றம்.

இனி, இக்காலத்துக்கு முற்பட்டது தொல்காப்பியம் என்பது நன்கு தெளிவாகின்றது. வடக்கும் தெற்கும் அரசியல் சமயத் துறைகளில் கலந்த இந்தச் கி. மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு நெடுங்காலம் முந்தியதுதான் தொல்காப்பியம் என்பதற்கு அதன் அமைப்பும் போக்குமே சிறந்த சான்றுகளாகும். தொல்காப்பியத்தில் பெளத்தம் சமணம் போன்ற சமயநெறிகளோ, அவற்றிற்கு மாறுபட்ட வைதிக நெறிகளோ பேசப் பெறவில்லை. ‘கொடிநிலை கந்தழி வள்ளி...’ என்ற சூத்திரத்தும், பிற இடங்களிலும் கடவுள் வழிபாட்டையும் வணக்கத்தையும் தொல்காப்பியம் சுட்டிக் காட்டுமேனும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமய நெறியை நாம் அதில் காண இயலாது.

வடக்கெல்லை :

வடக்கு என்று சொல்லும்போது வேங்கடத்துக்கு அப்பாற்பட்டதெல்லாம் வடக்காகவே முடிகின்றது. சங்க இலக்கியங்களில் அவை ‘மொழி பெயர் தேயம்’ எனவே குறிக்கப் பெறுகின்றன. வடக்கே வாழ்ந்தவரை வடுகர் என்றும் வடவர் என்றும் வழங்கினார்கள். இன்றும் தெலுங்கரை ‘வடுகர்’ என்று வழங்குவதைக் காண்கிறோம். மோரியர் படை எடுப்பில் இவ்வடுகர் முன்னுற்றனரோ என எண்ண வேண்டியுள்ளது.

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரிவிற்கு’ (அகம் 21)

என்று திட்டமாக வடுகரைத் தம்மினும் மாறுபட்டவர் என்றும், அவரோடு மோரியர் தெற்கு நோக்கி முன்னி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/109&oldid=1357852" இலிருந்து மீள்விக்கப்பட்டது