பக்கம்:தமிழக வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தமிழக வரலாறு


வந்தார்களென்றும் மாமூலனாரே கூறுகிறார். எனவே, தமிழ் நாட்டுக்கு அண்டையிலிருந்த வடுகர் மோரியருடன் சேர்ந்தனர் எனத் தெளிதல் வேண்டும். அவர் சேர்க்கை பின் அசோகன் காலம்வரை அப்படியே இருந்ததை வரலாறு காட்டுகிறது. இவ்வடுகரைப் பற்றிக் குறுந்தொகை,

‘குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நன்னாட்டு உம்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்’ (குறுந். 11)

என்று அவர் தமிழ்நாட்டு வடவெல்லையில் இருந்த வேற்று மொழி பேசிய தேயத்தார் எனக் குறிக்கின்றது.

வேங்கடத்தைக் கடந்து செல்வதையே வேற்று நாட்டுக்குச் செல்வதாகக் கருதினர் அன்றைய தமிழ் மக்கள். அந்த நாட்டு எல்லை மூவேந்தர் நாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதை,

‘தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎந்த பன்மலை இறந்தே’ (அகம். 31)

என்றும்,

‘பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேனத்த ராயினும்’
(அகம். 211)

என்றும் மாமூலர் காட்டுகிறார். எனவே, தமிழ்நாட்டு எல்லை அன்றும் வேங்கட வரையைக் கொண்டு அமைந்தது. எனினும், இந்நாட்டு வேந்தர்கள் இமயம் வரை வெற்றி கண்டும், வேறு வகையில் நட்புக் கொண்டும் வாழ்ந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. செங்குட்டுவன் இமயம் சென்று பத்தினித்தேவிக்குக் கல்கொணர்ந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/110&oldid=1357858" இலிருந்து மீள்விக்கப்பட்டது