பக்கம்:தமிழக வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழக வரலாறு


எடுத்துக் கொள்ளல் பொருந்தாது. முதற் சங்கத்துக்கு நூல் அகத்தியம் என்றும் இடைச் சங்கத்துக்கும் பின் கடைச் சங்கத்துக்கும் தொல்காப்பியமே நூலாய் இருந்தது என்றும் அறிகிறோம். தொல்காப்பியம் முழுவதும் இப்போது நாம் பெற்றுள்ளோம் அகத்தியத்திலும் சில சூத்திரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே, சங்கங்கள் இருந்திரா விட்டாலுங் கூட மிகப் பழங்காலத்திலிருந்தே பண்பட்ட இலக்கணச் சூத்திரங்கள் தோன்றியிருப்பதிலிருந்தே அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் வாழ்க்கை பண்பட்ட ஒன்றே என்று கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பியம் :

தொல்காப்பியம் இடைச் சங்கத்தும் கடைச் சங்கத்தும் இருந்த நூலாகக் கொள்ளப்படுதலின் தொல்காப்பியத்தின் வழி அன்றைய தமிழ் நாட்டை முன் கண்டு, பின்னர் சங்க இலக்கியத்தின் வழி இந்நாட்டைக் காணல் சிறப்பு உடையதாகும். வரலாற்று ஆசிரியர்கள் தொல்காப்பியர் காலம் இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பார்கள். ஆகவே தொல்காப்பியர் காலத் தமிழகத்தின் வரலாறு பழைய வரலாறேயாகும்

தொல்காப்பியத்தே மூவேந்தர் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. அவர்கள் ‘போந்தை, வேம்பு, ஆர்’ என்ற மூவகை மலர்களைச் சூடிய மரபு தெரிகின்றது. அவர்கள் ஆண்ட நாடு ‘வட வேங்கடம் தென் குமரி’ இடைப்பட்ட நாடு என அறிகின்றோம். இந்த நாட்டை முடியுடை வேந்தர் மூவரும் மூன்று பிரிவு செய்து கொண்டு ஆண்டார்கள் என்பதும் தெளிவு. அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/118&oldid=1357970" இலிருந்து மீள்விக்கப்பட்டது