பக்கம்:தமிழக வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

எண்ணங்களெல்லாம் ஒருங்கு திரண்டு அவன் உள்ளத்தில் உருப்பெற்றிருந்தன. அவ்வெண்ண அலைகளோடு மனிதன் நெடுங்காலம் வாழ்ந்திருந்தான். எண்ணங்கள் வரவரப் பெருகின. மிகப்பழங்காலத்துக்கு அவன் நினைவு சென்றது. அவன் முன்னைய வாழ்வும் பின்னைய வாழ் வும் கண்முன் நின்றன. ‘அன்று முதல் இன்று வரை’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான். அந்த நிலையில் எழுத்து வந்தது. எண்ணியவற்றை அப்படியே எழுத்தில் வடித்தான். அந்த எழுத்துருவமே ‘வரலாறு’ என்று பெயர் பெற்றது.

வரலாறு இல்லை;

நிலம்பற்றி ஆராய்கின்ற ஆராய்ச்சியாளர்கள் நிலத்தின் பல்வேறு தன்மைகளை ஆராய்ந்து எந்த மண் காலத்தால் முற்பட்டது எனக் கணக்கிடுகிறார்கள். இன்று நாம் காணும் உலகிலுள்ள ஐந்து கண்டங்களும் நிலம் தோன்றிய அந்தநாள் தொட்டு இப்படியே இருக்கவில்லை. இமயம் கடனுள் ஆழ்ந்த காலமும் இருந்தது; குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்த காலமும் உண்டு. எனவே, இந்த உலகின் நிலப் பரப்பு, கால வேகத்தில் அவ்வப்போது மாறிக் கொண்டே வருகின்றது. அவற்றை ஆராய்ந்து நில ஆராய்ச்சியாளர்கள் நிலத்தில் தொன்மை வாய்ந்தவை இவை. பின்னால் தோன்றியவை இவை எனப்பிரிக்கின்றனர் அவ்வாறு பிரித்தறிந்த நிலையில் வேங்கடத்திற்குத் தெற்கில் அமைந்த நம் தமிழக மண்ணே, பல நாட்டு மண்களைக் காட்டிலும் —

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/12&oldid=1356947" இலிருந்து மீள்விக்கப்பட்டது