பக்கம்:தமிழக வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத் தமிழகம்

131


பதிற்றுப்பத்தில் இறுதி நான்கு பாடல்களும் அவர்தம் பரம்பரைக்குரியன. அவற்றால் அவர்தம் வாழ்வு, வளன், திறன், செயல்முறை முதலியவற்றை அறியலாம்.

ஏனைய சிற்றரசர் :

இம்முடியுடை மூவேந்தரேயன்றி, எத்தனையோ சிற்றரசர்களும் அக்காலத்தில் வாழ்ந்துள்ளார்கள். அவருள் சிலர் பெருங்கொடையாளராய் இருந்து மூவேந்தரைக் காட்டிலும் மேலான புகழைப் பெற்றுள்ளனர். பறம்பு நாட்டுக் குறுநில மன்னனாகிய பாரியின் கொடை வளம் நாடறிந்த ஒன்று. அவன் முல்லைக்குத் தேரீந்து அதனால் நிலைத்த புகழ் பெற, அது கண்ட மூவேந்தரும் அவன் மேல் சினங்கொண்டு படை எடுத்தனர். அவர்களால் பாரி கொல்லப்பட்டான் என்பர். இவைபற்றி எல்லாம் சிறந்த புலவராகிய கபிலர் பாடியுள்ளார் பாரி ஆண்ட நிலப்பரப்பு மிகச் சிறியது—300 ஊர்களைக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஊர்களைக் கொண்ட அகன்ற நிலப்பரப்பை உடைய மூவேந்தரைக் காட்டிலும் கொடையில் சிறந்த புகழ் பெற்றான் பாரி. அதனால் வெறுப்புற்று வஞ்சகத்தால் அவனைக் கொன்றனர் மூவேந்தரும். எனவே, அக்காலத்தில் நிலப்பரப்பில் குறைந்தவராயினும் கொடைப் புகழால் சிறக்க வாழ்ந்த வள்ளல்களும் சிற்றரசர்களும் வாழ்ந்தார்கள் என்பது தெளிவு. பாரியேயன்றி, அதிகமான், ஓரி, காரி, நள்ளி, பேகன் என்னும் குறுநில மன்னர்களும், கொடைவள்ளல்களாய் வாழ்ந்து புலவர் பாடும் புகழைப் பெற்றனர். இவருள் சிலர் தனியாகவே சிறுசிறு நிலப்பரப்பை வைத்து வாழ்த்தனர். இரண்டொருவர் சிற்றரசர்களாகவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/133&oldid=1375661" இலிருந்து மீள்விக்கப்பட்டது