பக்கம்:தமிழக வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

முதல் இமயம் வரை உள்ள பல்வேறு பழம்பொருள்களைத் துருவி ஆராய்ந்தது. நிலத்தின் கீழ் அழிந்த பெரு நகரங்களும் அதன் எல்லையில் அகப்பட்டன. சிந்து நதிக் கரையில் ஆரப்பா மோகஞ்சதாரோவும், தமிழ் நாட்டு எல்லையில் தாம்பிரவருணி நதிக்கரையில் ஆதிச்ச நல்லூரும் அவ்வராய்ச்சியாளருக்குப் புலனாயின. சிந்துவெளி ஆய்வால் அவர்கள் ஒருபுதிய உணர்வு பெற்றார்கள். அந்த நாகரிகம் தென்னாட்டுத் திராவிட நாகரிகத்தை ஒத்தது என உணர்ந்தனர். அந்த வழியே தென்னாட்டு வரலாற்றை ஆராயத் தொடங்கினர். அதற்கேற்ப, தமிழகத்தில் இடைக்காலத்தில் தோன்றிய பெரும் பெருங்கோயில்கள் தம்முள் கல்வெட்டுக்களை நிறையப் பெற்றிருந்தன. இந்திய நாட்டுப் பிற பகுதிகளில் காணக் கிடையாத இந்த வரலாற்று மூலங்கள் ஆய்வாளர்களுக்கு நன்கு பயன்பட்டன எனலாம். வரலாற்றுக் கண் கொண்டு காண்பவருக்குக் கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் இடைக்காலத் தமிழ் நாட்டைக் காட்டின. எனவே, இந்திய அரசாங்கத்துத் தொல்பொருள் ஆய்வுப் பகுதி தமிழ் நாட்டு வரலாற்றை அறியப் பெருந்துணை புரிந்தது எனலாம். அவற்றுடன் பல செப்புப் பட்டயங்களும், மாமல்லபுரம் போன்ற கலை வாழிடங்களும் இடைக் காலத் தமிழகத்தை உலகுக்குக் காட்டின. எனினும், மிகப் பழையதாகிய பண்டைய தமிழகத்தைக் காணத்தக்க வரலாற்று மூலங்கள் கிடைக்கவில்லை. இலக்கியங்கள் ஓரளவு உதவின. சிறப்பாகச் சங்க காலத்தை அறிய அக்கால இலக்கியங்களாகிய பத்துப் பாட்டும் எட்டுத் தொகையுமே பெரிதும் பயன்படுகின்றன. அவை தவிர்த்துச் சில தனிக் காவியங்களும் கவிதைகளும் சற்றுப் புனைந்துரைத்தும் மிகைப்படுத்தியும் தமிழின் தொன்மையையும் தமிழ்நாட்டுத் தொன்மையையும் உயர்வு படுத்து-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/14&oldid=1356957" இலிருந்து மீள்விக்கப்பட்டது