பக்கம்:தமிழக வரலாறு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

தமிழக வரலாறு


மேலே கண்டோம். அவர்தம் ஆட்சி முறையைப் பற்றியும், அவர்கள் மக்களோடு கொண்ட தொடர்பு பற்றியும் அறிதல் அவசியம். அவர்கள் வழி வழி வரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராகையால், அவரை யாரும் அரச பதவியிலிருந்து விலக்க இயலாது. இவ்வுண்மையை உணர்ந்தவராயினும் அவர்கள், மக்கள் வழியே தம் அரசியலை அமைத்துக்கொண்டது போற்றத்தக்கதாகும். அவர்தம் கோநகரங்கள் சிறந்துவிளங்கின. புகாரும் மதுரையும், வஞ்சியும் காஞ்சியும் சங்க இலக்கியங்களால் நன்கு போற்றப்பெறும் பெருநகரங்களாகும். அந்நகரங்களின் அமைப்பும், அவற்றில் வாழ்ந்த மக்களின் நாகரிகமும் சிறந்தன. மக்கள்மேற்கொண்ட தொழில்களும், அறம் புரந்த பண்பாடும், பிறவும் அவர்கள் மன்னரோடு, கொண்ட தொடர்பினை நன்கு வெளிப்படுத்தும் எனலாம். கோநகரங்கள் அரசிருக்கைக்கு ஏற்ற வகையிலும், அமைச்சர் முதலியோர் தங்கும் வகையிலும், பல்வேறு வகைப்பட்ட மக்கள் கலந்து வாழும் வாழ்க்கைக்கு ஏற்ற நிலையிலும் அமைந்திருந்தன. நகர், அகநகர் புறநகர் எனவும் பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் எனவும் சில நல்ல வகைப்படுத்தப்பட்ட முறைகளால் பிரிக்கப்பட்டு நின்றதும், அவ்வவற்றில் வாழ்வார் யார் யார் என வரையறை செய்யப்பட்டிருந்ததும் வாழ்வு முறையைக் காட்டுவனவாம். இன்னும் பிறநாட்டு வணிகரும் கலைஞரும் அரசியலாரும் வந்து தங்குதற்கென அமைந்த விடுதிகளும் நிறைய இருந்தன. தனித்தனியாக ஒவ்வொரு வகையில் வாணிபம் புரிவோர் தெருக்களும், நாளங்காடி அல்லங்காடி என்ற பகல் இரவுக் கடைவீதிகளும், கோயில்களும், பிறவும் கோநகரங்களின் சிறப்பை விளக்குவனவாம். புகார் பற்றிச்சிலம்பும் மேகலையும், பட்டினப்பபாலையும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/142&oldid=1358393" இலிருந்து மீள்விக்கப்பட்டது