பக்கம்:தமிழக வரலாறு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

141


மதுரை பற்றிச் சிலம்பும், மதுரைக் காஞ்சியும், வஞ்சி பற்றிச் சிலம்பும், மேகலையும், காஞ்சி பற்றிப் பெரும்பாணாற்றுப்படையும், மணிமேகலையும் காட்டும் அடிகள் அறிந்து அறிந்து மகிழற்பாலன. இக் கோநரங்களிலே தான் அரசர் தம் ஐம்பெருங்குழுவோடும் பிற அரண்களோடும் ஆணை செலுத்தி வந்தனர்.

முடியுடை அரசருக்கு உடனிருந்து உற்றன சொல்ல ஐம்பெருங்குழு இருந்தது; எண்பேராயமும் அரசர் பக்கத்திருந்ததாக அறிகிறோம். அக்குழுவின் ஒரு பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரால் அமைந்தது, எனவே, சங்ககால முடியாட்சியும் ஒரு குடியாட்சியாய் இயங்கிற்று எனலாம். எத்தனையோ மன்னர்கள் தாம் இழைத்த தவறுகளைத் தத்தம் மக்கள் எடுத்துக் காட்டிய போது நாணித் திருந்தி வாழ்ந்ததைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன, வெள்ளைக்குடி நாகனாரது வாய்மொழி கேட்டுத் திருந்திய மன்னரும்,[1] கோவூர்கிழார் சொற்கேட்டுப் போரொழித்த மன்னரும்,[2] அக் கோவூர்கிழார் சொற்கேட்டுக் காரி மக்களை விடுத்த வேந்தனும்,[3] வெண்ணிக் குயத்தியார் சொற்கேட்டு வெட்க முற்று நாணிய கரிகாலனும்[4] அக்காலத்தவர்களே. இவை போன்ற நிகழ்ச்சிகள் சங்க இலக்கியத்தில் பல. எனவே மன்னர்கள் வழி வழியாய் வந்து தனி நிலைவில் ஆண்டாலும், அவர்கள் மக்கள் மணமறிந்து ஆண்டார்கள் எனலாம். மன்னர்கள் சிற்சில சமயங்களில் உள்நாட்டிலும், பிறநாடுகளிலும் போரிடுவதும் உண்டு. ஆயினும், அவ்வாறான போர்களுள்ளே சில, நல்ல மக்களாலே இடித்துரைக்கப் பெற்ற மேலான அறிவுரைகளால் நிறுத்தப் பெற்றுள்ளன. சிற்சில போர்களும் குழப்பங்களும்


  1. புறம், 35,
  2. புறம். 45,
  3. புறம், 46,
  4. புறம். 69
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/143&oldid=1358399" இலிருந்து மீள்விக்கப்பட்டது