பக்கம்:தமிழக வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

147


நாட்டில் நுழைய, தமிழர் நலங்கெட்ட காலத்திலேதான். அவர்தம் பழக்க வழக்கங்களும் வழிபாடுகளும் பிறவும் இங்கு அதிகமாகக் கால்கொள்ள ஆரம்பித்திருக்க வேண்டும். அவைப் பற்றிப் பின்னர்க் காண்போம்

சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் வடநாட்டுத் தொடர்பு கொண்டவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் உள. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற பாண்டியன் வடநாட்டு ஆரியரை வென்றவரலாறும், செங்குட்டுவன், கரிகாலன் ஆகியோர்தம் வடநாட்டுப் படை எடுப்புக்களும் நாடறிந்தனவே. அவர்களையன்றி, பெருஞ் சோற்று உதியன் சேரலாதன் என்ற பெயருடைய சேர மன்னனும் பேசப்படுகின்றான். அவன் பாரதப் போரில் வருந்தியோருத்குச் சோறளித்த சிறந்த வள்ளலாவன். அவனைப் புலவர்,

ஈரைம் பதின்மரும் பொருதுகளைத் தவியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
(புறம்.2)

எனப் பாராட்டுகின்றார். எனினும், அவனைப் பற்றி ஆராய வந்த நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், இச் செயலை அவன் முன்னோன் ஒருவன் மேல் ஏற்றுகின்றார்[1]. ஆயினும், நேராக அவன் செயல் எனவே இதை ஆசிரியர் குறிப்பிப்பதை மாற்றி வேறு வகையில் பொருள் கொள்ளத் தேவை இல்லை. ஸ்மித்து அவர்கள் காட்டுவது போன்று இராமாயண பாரத காலத்தைக் கி. மு. 400க்கும், கி. பி. 200க்கும் இடையில் கொண்டுவந்தால்[2] இந்த இடப்பாட்டுக்கும் வழியில்லை. கடவுளரின் அவதாரங்களாகக் காட்டும் இந்த வட-


  1. History of South India, p, 113
  2. 2. History of India, p. 33
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/149&oldid=1358432" இலிருந்து மீள்விக்கப்பட்டது