பக்கம்:தமிழக வரலாறு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கின்றன. பாண்டியன் மாகீர்த்தி என்பான் 40,000 ஆண்டுகள் அரசாண்டான் என்றும், சில அரசர்கள் பல ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்றும் எழுதப் பெற்றுள்ளன. இவை பொருந்துவனவல்ல இத்தகைய இயற்கைக்கு மாறுபட்ட எழுத்துக்கள் சங்க இலக்கியங்களில் இல்லை. ஆகவே, அவற்றை வரலாற்றுக்குத் துணையாகக் கொள்ளலாம். அவற்றைத் துணையாகக் கொண்டே இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அஞ்சல் துறையில் பணியாற்றிய யாழ்பபாணம் கனக சபைப் பிள்ளை அவர்கள் ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ என்ற ஒரு நூலை எழுதினார். இன்று தமிழக வரலாற்றை எழுதத் தொடங்குவோருக்கெல்லாம் அந்நூல் முன் வழி காட்டியாய் அமைந்துள்ளது.

தொடர்ந்த முயற்சி தேவை:

சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுப் பகுதி தமிழக வரலாற்று வளர்ச்சியில் கருத்துக் கொண்டது எனலாம். அப்பகுதியில் தலைவராய் இருந்த திரு நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் கல்வெட்டுக்களை ஆராய்ந்து பிற் காலச் சோழர் வரலாற்றை விளக்கமாக எழுதியுள்ளார்கள். மேலும் அவர்தம் பாண்டியர் வரலாறும் தென் இந்திய வரலாறும் தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளருக்குப் பயன் தருவன. திரு. மீனாட்சி அவர்களின் ‘பல்லவர் காலத்திய ஆட்சியும் சமூக வாழ்வும்’ என்னும் நூலும் கோபாலனுடைய ‘பல்லவ’ரும் மகாலிங்கத்தின் தமிழ் வெளியீடுகளும், சேஷ ஐயங்காருடைய ‘திராவிட இந்தியா’வும், P.T. சீனிவாச ஐயங்கார், M. சீனிவாச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/15&oldid=1356959" இலிருந்து மீள்விக்கப்பட்டது