பக்கம்:தமிழக வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழக வரலாறு


வரலாறும், கடல் மன்னன் வடமொழி வருணனானதும், துர்க்கையின் தோற்றமும் காலப்போக்கின் மாற்றத்தைக் காட்டுவனவன்றி வேறென்ன? இவ்வாறு தமிழுக்கே உரிய திணை நிலத் தெய்வங்கள் எவ்வெவ்வாறு மாற்றமுற்றும் நிலைகெட்டும் வந்தன என்பதை இன்னும் நன்கு ஆராய்தல் வேண்டும். நிற்க. இப்படித் திணை நிலத் தெய்வங்கள் பெயர் மாற்றமும் பிற மாற்றங்களும் பெறச் சிவன் பெயர் மாற்றம் பெறாமலே பிற மாற்றங்களுடன் வேதவாணர்தம் கடவுளாகக் காண்கின்றான். எனினும், சங்க இலக்கியத்தில் காண்ப்படும் சிவனும், திருமாலும், கந்தழியும், வள்ளியும் அவர்தம் தமிழ் உள்ளத்தெழுந்த உயர் தெய்வங்களென்றும், அவற்றின் வழித் தமிழர்தம் வாழ்க்கை நெறியையே அன்று காட்டினார்கள் என்றும் கொள்வது பொருத்தமானதாகும். இவர்கள் வேத காலச் சிவ விட்டுணுக்களினும் வேறுபட்டவர்கள் என்பதும் அறிய வேண்டுவதாகும்.

பிற இயல்புகள்:

இன்னும் மக்களின் சமுதாய வாழ்வில் எத்தனையோ காணல் தகும். ஒரு சில அடுத்துவரும் காப்பிய கால வாழ்வொடு பின்னிப் பிணைந்துள்ளன. சங்க காலத்தில் மக்கள் கள்ளையும் ஊனையும் வெறுத்து ஒதுக்கவில்லை எனத் தெரிகின்றது. ‘நேக்கிலை பெய்த தேக்கள் தேறலை’ச் சிறந்த கபிலர் உண்டதாகக் காண்கின்றோம் இன்னும் ஈசற் சோறும், பிறகறிச் சோறுகளும் புலவரை நன்கு பாடவைத்தன என்பதைக் காண்கிறோம். பாற்சோறும் தயிர்ச்சோறும் சிறந்த உணர்வுகள்தாம். நிறைய மரக்கறி உணவும், மாமிச உணவும் அச்சோற்றுடன் கலந்து பயன்பட்டன எனக் காண்கிறோம். பசுவின் பாலும் நெய்யும் மோரும் தயிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/152&oldid=1358439" இலிருந்து மீள்விக்கப்பட்டது