பக்கம்:தமிழக வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலத்துச் சமூக வாழ்வு

151


சிறந்த உணவுப் பொருள்களாய் நின்றன. அவர்தம் விருந்து புரந்தோம்பும் வாழ்வு சிறந்த வாழ்வாகும்.

அக்காலத்தில் நாடு முழுவதும் நல்ல சாலைகள் இருந்தன என அறிகிறோம். காட்டு வழியிலுங் கூடக் கரடு முரடான பாதைகளாயினும் அவை தனியாகச் செல்லும் வகையில் அமைந்திருந்தன. ஆற்றுப் படைகளுள் அவர்கள் செல்லும் பாதைகளை எண்ணும் போது சில நன்கு அமைந்துள்ளன என்றும் சில காட்டு வழிகளாக இருப்பினும் மற்றவருக்குக் காட்டினால் புரிந்துகொள்ளும் வகையில்தான் இருந்தன எனவும் காண்கின்றோம். இவ்வாறு அரச பாட்டைகளும் அல்லாச் சிறு பாதைகளும் நன்கு அமைந்து நாட்டை அணி செய்தன எனலாம். அது போன்றே அரசர்கள் நீர்ப்பாசன வசதிகள் செய்தார்கள். காவிரிக்கு முதன்முதல் கரை கட்டிய பெருமை கரிகாலனுக்கு உண்டு என்பர். பல்வேறு ஏரிகள் அமைத்து விளைநில எல்லையைப் பெருக்கினனர் அக்கால மன்னர்கள். இன்றைய பொதுத்துறைப் பகுதிகள் யாவும் (Public Works Department) அந்தச்சங்காலத்தில் தோன்றி உருப்பெற்றனவே எனலாம். இவ்வாறு எவ்லா வகையிலும், தமிழ்நாடு ஏற்றமுற்றிருந்த நல்ல பொற் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் எல்லையில் முடிவுற்ற சங்க காலமே எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/153&oldid=1358082" இலிருந்து மீள்விக்கப்பட்டது