பக்கம்:தமிழக வரலாறு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XI. காப்பிய காலத்தில் தமிழகம்


சமய சமூக மாறுதல்கள்:


வடக்கும் தெற்கும் என்று இணைந்தன என்பது திடயமாகக் கூற முடியாவிட்டாலும், அந்தாள் தொட்டு அங்கே வடக்கே ஏற்படும் மாறுதல்களும் பிறவும் தென்னாட்டை ஒரளவு பாதிக்கச் செய்தன எனலாம். கலை, பண்பாடு, நாகரிகம், வாழ்க்கைமுறை எல்லாவற்றிலும் தமிழ்நாடு வடவிந்தியாவைக் காட்டிலும் வேறுபட்ட நிலையிலே இருந்தாலுங்கூட, அந்த வட நாட்டு அரசியல், சமூக சமய இயல் மாற்றங்கள் ஒரளவு தமிழ் நாட்டையும் தொட்டுவிடுகின்றன என்பதை வரலாறு காட்டுகின்றது. ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே-புத்தர் பிறந்த நாளிலிருந்தே இந்த மாற்றங்களைக் காண இயலும், வடவிந்தியாவுக்குத் தென் மேற்கு கணவாய் வழியாக வந்த ஆரியர் தம் வேதத்தையும் அதன் வழிக் கடவுளரையும் உண்டாக்கிக் கங்கை சிந்து வெளியில் வழிபட்டு வந்தனர். எனினும், அவர்தம் வாழ்க்கையில் புத்த சமண சமயத் தோற்ற வளர்ச்சி ஒரு பெறுமாறுதலைச் செய்துவிட்டது என்பது உண்மையாகும். புத்தர் பெருமான் பிறந்து வாழ்ந்த காலத்திலே பெளத்தம் ஒரளவு பரவியது என்றாலும், சரியாக அவர் பிறந்த ஒரு நூற்றாண்டுத்குப் பின்புதான் அது சிறக்க வளர்ந்தது எனலாம். வைசாலியில் கி.மு 377இல் உண்டான இரண்டாவது புத்த சங்கமே அச்சமயத்தை நாடு முழுவதும் பரப்ப வழிதுறைகளை மேற் கொண்டது என்பர் ஆய்வாளர். அதற்குப்பின் அசோகர் காலத்தில் கி.மு. 240இல் உண்டான மூன்றாவது புத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/154&oldid=1358084" இலிருந்து மீள்விக்கப்பட்டது