பக்கம்:தமிழக வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பிய காலத்தில் தமிழகம்

155


கதையே சிலப்பதிகாரம். கோவலனுக்கு மாதவி வழிப் பிறந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவதே பற்றொன்று. இப்படி ஒரே குடும்பத்தைப் பற்றி எழுந்த இரண்டு காப்பியங்களே அன்றைய தமிழ் நாட்டு நிலையை ஒரளவு நமக்குக் காட்டுகின்றன எனலாம். சிலப்பதிகாரம் மூவேந்தரையும் பிணிக்கின்றது. ‘முடிகெழு வேந்தர் மூலர்க்கு முரியது’ எனச் காத்தனார் கூறியதாக வரும் அடி நோக்கற்பாலது. எனினும், கோவலன் வாழ்ந்த காலத்தில் சோழ நாட்டில் சிறந்த சோழமன்னர் யாரும் இல்லை என்றுதான் கொள்ள வேண்டுயுள்ளது. மதுரைக் காண்டத்திறுதியில் நெடுஞ்செழியனையும், வஞ்சிக்காண்டத்திறுதியில் செங்குட்டுவனையும் காட்டிய இளங்கோ அடிகள், புகார்க் காண்டத்திறுதியில் ஒரு சோழனையும் காட்டவில்லை. எனினும், சோழ அரசன் இல்லாது சோணாடு இல்லை. எனவே எவனோ சாதாரண மன்னனாய் வாழ்ந்திருந்திருக்கக் கூடும். அவனே பின் மணிமேகலையில் பேசப்பெறும் உதயகுரமன் தந்தையாய் இருக்கலாம். பாண்டி நாட்டிலோ, நெடுஞ்செழியன் வாழ்ந்து வந்தான். நம் சங்க காலத்தில் கண்ட நெடுஞ்செழியனும் இவனும் ஒருவரல்லர். அந்த நெடுஞ்செழியனுக்குப் பின் உக்கிரப்பெருவழுதி சங்கம் கலையும் காலத்திருந்தான் பின் இந்நெடுஞ்செழியன் பட்டத்திற்கு வந்திருக்கலாம். இவனும் அறியாது முதலில் தவறு இழைத்தனாயினும், பிறகு தவறு அறிந்துதன் தவற்றினையும் திருத்திக் கொண்டு தன் குற்றம் பிற மன்னர் செவிப்படுமுன்அரசு கட்டிலிலிருந்து வீழ்ந்த இறந்த வீரன். செங்குட்டுவனைப்பற்றி முன்னமே கண்டோம். தமிழ் நாட்டில் அன்று சிறக்க வாழ்ந்த மன்னன் செங்குட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/157&oldid=1358090" இலிருந்து மீள்விக்கப்பட்டது