பக்கம்:தமிழக வரலாறு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழக வரலாறு


காணமுடியும் என்ற ஒர் எண்ணம் இருந்தது, எனினும், சிலப்பதிகார காலத்தில் அந்நிலையில் அன்றி ஊழே அனைத்துக்கும் அடிப்படை என்ற உண்மை வலியுறுத்தப் பெற்றது. சிலம்பே அதே உண்மையை விளக்க எழுந்த நூல் என்பது அதன் பதிகத்தால் அறியப்பெறும் உண்மை யாகும்.

‘ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதுாஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்றும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்’

என்று இளங்கோவடிகள் கூறினார் என்பது பதிகம். இல்வாறு கடவுள் உணர்வோடு ஊழையும் பின்னிக் கலந்து, கடவுளரையும் கடந்து ஊழ் வந்து உறுத்தும் என்ற கொள்கை இக்காலத்திலேதான் நாட்டிலும் நுழைந்தது போலும்! இதுவே காலம் செல்லச்செல்ல நவக்கிரக வணக்கங்களையும், பிற ‘செத்துச் செத்துப் பிறப்பதைத் தே’ வெனப் போற்றும் வழக்கங்களையும் கொண்டுவந்துவிட்டது எனலாம். இவ்வாறு சமயத்தில் ஏற்பட்ட மாறுதல்களன்றிச் சமூகத்திலும் சிற்சில மாறுபாடுகள் ஏற்பட்டன என்பது கண்கூடு.

மக்களுள் வாணிபஞ் செய்வோரைச் சிறந்தவர்களாக இருக்கச் செய்து போற்றியதோடு, பிற தொழிலாளரையும் ஏற்றம் காட்டிப் போற்றினார்கள் எனக் காண்கிறோம். ஆயர் குலப் பெண்ணாகிய மாதரியிடம் ‘இடைக்குலமாதர்க்கு அடைக்கலம் தந்தேன்’ என்று பெருமையாகக் கூறிக் கவுந்தி அடிகள் கோவலனையும் கண்ணகியையும் அடைக்கலப் பொருளாகத் தந்ததும், அவ்வடைக்கலப் பொருளுக்கு அழிவு வந்தகாலை-கோவலன் கொலை யுண்ட காலை-மாதரி வருந்தி உயிர்நீத்து நின்றதும் அக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/168&oldid=1358121" இலிருந்து மீள்விக்கப்பட்டது