பக்கம்:தமிழக வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

X. தமிழக வரலாற்றில் இருண்ட

காலம்

எது இருண்ட காலம்?

தனி மனித வாழ்வில் மேடு பள்ளங்கள் இருப்பதைக் காண்கிறோம். சில காலம் வாழ்வில் உயர்ந்தும் சில காலம் வாழ்வில் தாழ்ந்தும் நாட்கள் கடந்து செல்கின்றன. புகழ் ஏணியின் உச்சியில் ஏறி நின்று ஒளி வீசித் திகழ்வதும், பின் ஒருகால் படுபாதாளத்தில், தள்ளப்பட்டு ஆழ்ந்து நிற்பதும் மனித வாழ்வின் மாறா உண்மைகள். இந்த உண்மைகள் வரலாற்று வாழ்வுக்கும் பொருந்தும் போலும்! ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயும்போது அந்நாடு சில காலம் தன் தலைநிமிர்ந்து ஒங்கி நிற்பதையும், சில காலம் தன்வலி குன்றி அயலாருக்கு அடங்கி இருப்பதையும் காண்கின்றோம். சில நாட்டு வரலாறுகள் தொடர்ந்து அறிய முடியாத வகையில் இடையிடையே அறுபட்டு நிலை கெட்டுப்போவதையும் காண்கிறோம். இந்த நிலை நம் நாட்டு வரலாற்றுக்கும் உண்டு என அறிகின்றோம். தலைநிமிர்ந்து தனிப் புகழுற்றுச் சங்க காலத்தே சிறந்து நின்ற தமிழ்நாடு, அடுத்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் எந்த நிலையில் இருந்தது என்றுகூட அறிய முடியா வகையில் இருட்டில் இருந்தது என எண்ணும்போது தமிழர் வருந்தாதிருக்க முடியாதே! கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை முடியுடை மூவேந்தரால் ஆளப்பட்டுத் தலை நிமிர்ந்து நின்ற தமிழகம் நினைக்கவும் இடை வெளியில்லாச் சிறு காலத்தில் எப்படியோ நிலை கெட்டுவிட்டது.

காரணம் என்ன?

சேரன் செங்குட்டுவன் மேல் பகுதியை ஆண்ட காலத்தில் சோழரும் பாண்டியரும் வலியற்றிருந்தனர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/170&oldid=1358125" இலிருந்து மீள்விக்கப்பட்டது