பக்கம்:தமிழக வரலாறு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

169


என மேலே கண்டோம். செங்குட்டுவனுக்குப் பின் சேர நாட்டிலும் சிறந்த மன்னர் இல்லை. எனவே, தமிழ் நாட்டுத் தலை சிறந்த மூவேந்தர் பரம்பரையில் தக்க மன்னர்கள் இல்லாமையின், யாரும் உள் நுழைய வழி ஏற்பட்டது. அதே வேளையில் வடக்கிலிருந்து சமயம், பண்பாடு ஆகியவற்றைப் பரப்பும் நோக்கோடு பலப்பல வகையினர் இங்குத் தடுப்பாரின்றி நுழைய ஆரம்பித்தனர். மேலும், கலைவளர்க்கும் அந்நோக் கோடு வந்த அந்த வடவரை விருந்தோம்பும் பண்பாடு கொண்ட தமிழர்கள் வரவேற்றார்கள். இவ்வாறு கலையும் சமயமும் ஒருபுறம் தம்வழியே பிறர் ஆதிக்கத்தைத் தமிழ்நாட்டில் செலுத்தத் தொடங்கிய அந்த வேளையில்-தமிழ்நாட்டில் மூவேந்தரும் வலிகுன்று நிலையிழந்து நின்ற அதே நேரத்தில்-தமிழ்நாட்டை அடுத்த ஆந்திர மைசூர்ப் பகுதியிலும் அதற்குச் சற்று வடக்கிலும் புதுப்புது அரச பரம்பரைகள் புத்துணர்ச்சியோடு மேலோங்கி வரலாயின. அவற்றின் அரசியல் ஆதிக்க மும் தமிழ்நாட்டு வரலாற்றை இருட்டடிப்புச் செய்யும் வகையில் அமைந்தன எனலாம். இப்படிப் பிற நாட்டு அரசியல், வாழ்வியல், சமய இயல், சமூக இயல் அனைத்தும், தட்டிக் கேட்க ஆளற்ற அந்த இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில், தமிழகத்தில் இடம் பெற்றுத் தமிழர் தம் வாழ்வினை ஒளி மங்கச் செய்தன என்பது கண் கூடு.

வட விந்தியா:

வடவிந்தியாவில் இந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளே சிறந்த பொற்காலமாய் விளங்கின எனலாம். அசோகரது ஆட்சிக்குப் பிறகு சில காலம் வடநாட்டு வரலாறு மங்கிவிட்டது எனலாம். எனினும், மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் மறுபடியும் குப்தர் பரம்பரையின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/171&oldid=1358131" இலிருந்து மீள்விக்கப்பட்டது