பக்கம்:தமிழக வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

தமிழக வரலாறு


ரும் ஹர்ஷரது முன்னோர்களும் ஆளத் தொடங்கியபின் வடநாடு ஒளி பெற்று விளங்கிற்று. அந்தச் சமயத்தில் பெளத்த சமண சமயங்கள் வட நாட்டில் நிலை குலைந்து விட்டன எனலாம். அசோகரால் சீர்தூக்கி வளர்க்கப் பெற்ற புத்த சமயம் வெகு சீக்கிரத்திலேயே நிலை கெட, அதனை ஒட்டிச் சமணமும் தன் நிலை தளர்ந்தது எனலாம். அதற்குப் பதில் பழைய வேத சமயம் ‘இந்து சமயம்’ என்ற புதுப் பெயருடன் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் கொண்டு அங்குத் தலைநிமிர்ந்து வளரலாயிற்று. தம் இடமிழந்த பெளத்தமும் சமணமும் தெற்கே தமிழ்நாட்டில் அந்த நூற்றாண்டுகளில் ஆதிக்கம் செலுத்தித் தமிழர்தம் உண்மை வாழ்வை மறைத்து விட்டன எனலாம். அவை வெறுஞ் சமயங்கள் என்றாலும், அவற்றுடன் வந்த வடவர் சமயத்தோடு தத்தம் கொள்கைகளையும் பிற இயல்புகளையும் இங்குப் புகுத்தி விட்டதனாலேயே தமிழ் நாடு பெரும்பாலும் நிலை கெட்டது என்பர் ஆய்வாளர்.

கி.பி.320ல் குப்த வமிசத்தவர் தமக்கு முன் ஆண்ட குஷான் வமிசத்தவரைத் துரத்தி வடவிந்தியாவைத் தாமே அரசாளத் தொடங்கினர். அந்தக் குப்த பரம்பரையில் முதலாம் சந்திரகுப்தனும் இரண்டாம் சந்திரகுப்தனும் முக்கியமானவர்கள். இவர்களுக்கும் அசோகன் முன்னோனனான அந்தச் சந்திரகுப்தனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இந்தக் குப்தவமிசத்தில் சந்திரகுப்தரும் சமுத்திரகுப்தரும் தோன்றி வாழ்ந்தனர். சமுத்திர குப்தன் மகனான இரண்டாம் சந்திரகுப்தன் காலத்து நாணயங்கள் (கி.பி 380) கிடைக்கின்றன. அவற்றில் பொறிக்கப்பட்ட உருவங்களைக் கொண்டு அவன் பரம்பரையினர் இந்து சமயத்தைப் போற்றியவர் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/172&oldid=1358130" இலிருந்து மீள்விக்கப்பட்டது