பக்கம்:தமிழக வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

171


தெரிகின்றது. பெளத்த சமணத்தால் தன் நிலை இழந்த இந்து சமயத்தை இவர்கள் மறுபடியும் வளர்த்து முன்னேறச் செய்தார்கள். ஏறக்குறைய இந்தக் காலத்திலேதான் சீன யாத்திரிகனாக பாஹியான் இந்தியா வந்தான்.அவன் கி.பி.401லிருந்து 410வரை இங்குத் தங்கிச் சீனம் திரும்பினன். அவன், வடவிந்தியாவில் இந்து சமயம் சமணசமயத்தைத் தாழ்த்தித்தான் மேலோங்கிய காலமே அக்காலம் என்று குறித்தான் ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் மேலை நாடுகளுடன் வடநாடு வாணிபம் செய்து வந்தது. மேலைப் பகுதியிலிருந்து வந்த ஹூணர்கள் வட விந்தியாவில் தொல்லை தந்து வந்தார்கள். அவர்கள் இறுதியில், ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், ஹர்ஷராலும் அவர் முன்னோராலும் அழிக்கப்பெற்றார்கள். ஹர்ஷர் சமண சமயத்தவராயினும் பிற சமயத்தைப் பேணி வளர்த்தவர். இவ்வாறு வடநாட்டு வரலாறு திட்டமாக வரையறுத்துச் சொல்லப் பெறும் இந்த நாளிலேதான் தமிழ் நாட்டு வரலாறு இன்னதென அறியா வகையில் நிலை குலைந்து. எல்லா வகையிலும் நாடு மாற்றாரது ஆதிக்கத்துக்கு உட்பட்டு இருந்தது: இதை இருண்ட காலம் என்னாது வேறு என்னென்று சொல்வது?

விளங்காத மாற்றங்கள்:

தமிழ் நாட்டில் இருண்ட காலத்தில் ஆண்டவர்கள் யார் யார் என்பது திட்டமாகத் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பது பற்றியும் ஒன்றும் வரையறுத்துக் கூற முடியவில்லை. எனினும், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் மறுபடியும் தெளிந்த தமிழ் நாட்டைக் காணும்போது அதில் இருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/173&oldid=1358133" இலிருந்து மீள்விக்கப்பட்டது