பக்கம்:தமிழக வரலாறு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

173


சோழமரபினன்; சிறந்த வீரன்; காஞ்சியிலிருந்து ஆண்டவன். இவர்கள் அவன் பரம்பரையினர் என்று கொண்டால், இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டு வரலாறு இவ்வாறு இருண்டிருக்குமா? முதற் பல்லவர்தம் மொழியும், கல்வெட்டுக்களும், நூல்களும் தமிழ் மொழியினும் வேறாய் இருப்பனகொண்டே, அவர் தமிழரினும் வேறுபட்டவர் எனக்கொள்ளல் பொருந்தும். கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ் நாட்டு நிலையை உணர்ந்து அவர்களும் தமிழ் மன்னராகித் தமிழ்த் தொண்டு செய்தார்களேனும், முதற்பல்லவர்கள் வட மொழி, பிராகிருதம் போன்ற மொழிகளையே போற்றி வளர்த்தார்கள் என்பது கண் கூடு. திரு S கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் குறித்தபடி[1] பல்லவர்கள் சிந்துநதி முகத்துவாரத்தில் இருந்த பார்தியன் மரபினர் (Parthian) என்று கொள்ளல் தகும். பாரத இராமாயணத்தில் பல்லவர் எல்லைப்புற மக்களாகக் குறிக்கப்பெறுகின்றனர். மகாவமிசம் என்னும் இலங்கை வரலாற்று நூலும் பல்லவரைத் தமிழர் அல்லர் என்றும் அவர்கள் ‘பல்லவ போக’ நாட்டிலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர்கள் என்றும் குறிக்கின்றது. எனவே வடநாட்டிலிருந்து பல்வேறு வகை மக்களும் கொள்கைகளும் தமிழ் நாட்டில் தடுப்பாரில்லாத அந்த இருண்ட காலத்தில் குடியேறினது போன்று, பல்லவரும் வடக்கே இருந்து வந்து குடியேறிச் சிறுகச் சிறுகத் தம் ஆதிக்கத்தை வளர்த்து, பின் காலப்போக்கில் நாட்டின் நிலை அறிந்து தம்மையே தமிழராக்கிக் கொண்ட ஒரு மரபினர் என்பது தெளிவு.

களப்பிரர் யாவர்?

இந்த இருண்ட காலத்தில் பல்லவரைத் தவிர வேறு சில மன்னர்களும் வடக்கே தலை தூக்க ஆரம்பித்


  1. 1 Some Contributions of South India to Indian Culture, P. 20
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/175&oldid=1358138" இலிருந்து மீள்விக்கப்பட்டது