பக்கம்:தமிழக வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

தமிழக வரலாறு


தனர். இந்த இருண்ட காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் ‘களப்பிரர் இடையீட்டுக் காலம்’ என்றே கூறுவர். ‘களப்பிரர் யார்? அவர்கள் எப்படித் தமிழகத்துக்கு வந்தார்கள்?’ என்பன இன்னும் திட்டமாகப் புரியாத புதிராகவே உள்ளன. டாக்டர் இராசமாணிக்கம் அவர்கள் தம் பல்லவர் வரலாற்றில்[1] களப்பிரர், காளத்தி முதலிய தமிழ் நாட்டு வட எல்லை மலைத்தொடர்களில் வாழ்ந்த ஒரு கள்ளர் கூட்டத்தினரே என்றும், அவர்கள் அரச பரம்பரையினர் அல்லர் என்றும், அவர்கள் தமிழ் நாட்டில் நுழைந்து மூவேந்தரையும் வென்று பாண்டிய நாடு வரையில் ஆண்டார்கள் என்றும், அவர்களுக்கும் பல்லவர்க்கும் இடையறாது போர்கள் நடந்துகொண்டே இருந்தன என்றும் குறிக்கின்றார். களப்பிரர் அரசர் பரம்பரையினர் அல்லரேனும், சந்தர்ப்பமும் சமயமும், தமிழ் நாட்டுக்கு அண்மையில் அவர்கள் இருந்த நிலையும் அவர்களைத் தமிழ் நாட்டு அரசர் வரிசையில் சேர்க்கும் நிலையில் வைத்துவிட்டன. வாணிபத்தின் பொருட்டுக் கடல்கடந்து வந்த ஒரு சிறு மேலை நாட்டுக்குழுவினர் பின் பரந்த பாரத நாட்டையே ஆண்ட வரலாறறிந்த நமக்கு இது வியப்பன்று. வேள்விக்குடி, சின்னமானுர்ச் சாசனங்கள் இக்களப்பிரர் தம் ஆட்சியைக் குறிப்பதோடு, அந்த இடைக் காலத்தில் எண்ணிறந்த அரச பரம்பரையினர் தமிழ் நாட்டை ஆண்டு மறைந்தனர் என்பதையும் குறிக்கின்றன[2]. எனவே, அந்த இருண்ட இடைக்காலத்தில் களப்பிரரும் பல்லவருமன்றி எத்தனையோ புதுப்புது அரசுகள் தமிழ் நாட்டில் வந்து ஆண்டு சென்றிருக்கின்றன என அறிகின்றோம். சோழர் நாடு சிதறுண்டு அவர் சிற்றரசராய் இருந்த வேளையிலேதான் களப்


  1. 1. பல்லவர் வரலாறு, br Dr. இராசமாணிக்கம், p. 37.
  2. 2. Ibid.,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/176&oldid=1358141" இலிருந்து மீள்விக்கப்பட்டது