பக்கம்:தமிழக வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

175


பிரரும் பல்லவரும் வடக்கிலிருந்து தமிழகத்தில் புகுந்தனர். முன்னர் வந்த களப்பிரரை விரட்டிப் பல்லவர் மேன்மேல் எழஎழ, களப்பிரர் தெற்குநோக்கிச் சென்று கொண்டே இருந்தனர். அங்குத் தடுப்பவர் இன்மையின், அவர்தம் ஆட்சி தென்பாண்டி நாடுவரை சென்றுவிட்டது எனலாம். தம்நிலை இழந்த களப்பிரர், பல்லவரையும் விட்டு விடவில்லை. அவர்கள் மறுபடியும் பல்லவரை எதிர்த்து அவர்களைக் காஞ்சியிலிருந்து துரத்தியவர் ஆதல்வேண்டும். இப்படிக்காஞ்சி, பல்லவருக்கும் களப்பிரருக்கும் இடையில் மாறி மாறி நிலைகெட்டு நின்றது எனலாம். இவ்வாறு தமிழ் நாட்டை வெளியிலிருந்து வந்து இருவரும் போர்க்களமாக்கி நிலைகுலையச் செய்தனர். இறுதியில் பல்லவர் வெற்றிபெறவே, தெற்கே சென்ற களப்பிரர் தமிழரோடு கலந்து தமிழராகவே மாறி விட்டனர். அவர்களே பின்னர் முத்தரையச்சிற்றரசர்களாகவும் பிறகு குறுநில மன்னராகவும் இருந்தனர் என்பர். அவர்களே இப்போது தென் தமிழ் நாட்டில் உள்ள கள்ளர் மரபினர் என்பர் சில வரலாற்றாளர்கள்.

வடக்கிலிருந்து இந்த இரண்டு பேரரசுகள் வந்ததோடு வேறு சில புதிய அரசுகளும் அக்காலத்தில் தோன்றலாயின. அவர்களுள் ஒரு பரம்பரையினரே சாதவாகனர். ஒரு சிலர் பல்லவர் சாதவாகனப் பரம்பரையிலிருந்து வந்தவரே என்பர். ஆந்திர நாட்டை ஒட்டிய பகுதியில் தோன்றி வாழ்ந்த இந்தச் சாதவாகனப் பரம்பரை நான்காம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் அழிந்துவிட்டது. இப்பரம்பரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும், வடநாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/177&oldid=1358142" இலிருந்து மீள்விக்கப்பட்டது