பக்கம்:தமிழக வரலாறு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

179



வந்து கப்பல் அழிய, அது கேட்டு தன் மகன் அழிவு ஆற்றாது சோழன் விழா மறந்ததே புகார் அழிவுக்குக் காரணமாயிற்று. எனவே, இளந்திரையன் கடல் அலையால் தள்ளப்பெற்றுக் காஞ்சியை அடைந்து, அதைத் தலைநகராக்கி ஆண்டான் என்பர். காஞ்சியும் சங்க காலத் தலைநகரங்களைப் போன்று பழைமை பெற்ற நகரமே. கி. மு. 200 லேயே பதஞ்சலி காஞ்சியைப்பற்றிக் குறித்திருக்கின்றார். எனவே, பழங்காலத்திலேயே காஞ்சி பழம்பெருநகரமாய் விளங்கிற்று. இளந்திரையனுக்குமுன் கரிகாலன் அதைச் செப்பம் செய்தான் எனக் காண்கின்றோம். இளந்திரையன் அதை இன்னும் விரிவாக்கி, அங்கே அரசிருக்கை அமைத்துக் கொண்டான் என்பது பொருந்தும். அதே காஞ்சி, பிறகு பல்லவர் தலைநகரமாய் விளங்கிற்று.

புகாரும் வஞ்சியும்.

புகார் கடாலால் கொள்ளப்பட்டமை தமிழகத்துக்கு ஒரு பெரிய இழப்பாகும், வடக்கே இருந்து வந்த வேற்று மக்கள் தமிழர் பண்பாட்டைச் சிதைத்தும் மாற்றியும் அழித்த அதே வேளையில். இப்படி இயற்கையும் கிழக்கே புகாரை அடியோடு அழித்தும், மேற்கே வஞ்சியை நிலைகுலையச் செய்தும் பேரிழப்பை உண்டாக்கிவிட்டது. வஞ்சியைச் சிலர் இக்காலக் கரூர் (திருச்சி மாவட்டம்) எனக்கருதுவர். இதுவே பழங்காலச் சேரர்தம் தலைநகராகிய கரூர் என்பர். ஆனால், அது பொருந்தாது என்பதைக் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் தமது சேரர் வஞ்சியில் திட்டமாக விளக்கிவிட்டார்கள்.[1] எனவே, சேரர்தம் பழந் தலைநகராகிய வஞ்சி இக்காலத்துக் கொச்சி நாட்டில் உள்ள திருவஞ்சைக்களந்தான் என்று கொள்ளல்


  1. சேரர் வஞ்சி: டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/181&oldid=1375672" இலிருந்து மீள்விக்கப்பட்டது