பக்கம்:தமிழக வரலாறு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழக வரலாற்றில் இருண்ட காலம்

181


பரம்பரையும் தோன்றி, இழந்த தமிழர் பண்பை நிலை நாட்டி வெற்றி கண்டமை போன்று, சேர நாட்டில் இருண்ட காலத்துக்குப்பின் தமிழ்நலம் புரக்கச் சிறந்த சேரப் பேரசு தோன்றாமையே இந்தப் பிரிவுக்குக் காரணமாயிற்று எனலாம். இவ்வாறு இந்த இருண்ட காலம் தமிழர்தம் பண்பாடு முதலியவற்றை ஒரளவு மாற்றியோடு நில்லாது, தலைநகரங்களை அழித்ததோடு அமையாது, ஒரு பகுதியாகிய சேர நாட்டையும் இழக்கும் நிலைக்கு அடிகோலியாகவும் அமைந்துவிட்டது எனலாம்.

மக்கள் வாழ்க்கை:

இனி, இந்த இருண்டகாலத்தில் தமிழ் நாட்டு மக்கள் எந்த நிலையில் வாழ்ந்தார்கள் என்பதைக் காணலாம். இரண்டாம் நூற்றாண்டினையும் ஏழாம் நூற்றாண்டினையும் ஒத்து நோக்கும்போது தமிழ்நாட்டில் எத்தனையோ மாறுதல்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று கண்டோம். அவற்றுள் மொழி மாற்றம் ஒன்று, தமிழில் சங்க காலத்தில் வடமொழிச் சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை என்பது கண்கூடு. ஆனால், ஏழாம் நூற்றாண்டில் தமிழ் நூல்களில் வடமொழிச் சொற்கலப்பு அதிகமாகிவிட்டது; அதற்குக்காரனம் தமிழ் நாட்டில் உண்டான சமய மாறுபாடேயாகும். பெளத்தம் தமிழ் நாட்டில் சாத்தனார் காலத்தில் இரண்டாம் நூற்றாண்டில்-உயர்ந்திருந்தது என்று கண்டோம். எனினும். ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தம் அடியோடு அழிந்து, சமண சமயமே தமிழ் நாட்டில் மேலோங்கி இருந்தது. சமணம் பெளத்தம் இரண்டும் வடநாட்டில் இருந்து வந்தமையின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/183&oldid=1358155" இலிருந்து மீள்விக்கப்பட்டது