பக்கம்:தமிழக வரலாறு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தமிழக வரலாறு


ஆண்ட பல்லவன் பப்பதேவன் என்பது முடிவாக்கப்பட்டது. பப்பதேவன் முதல் விஷ்ணுகோபன் ஈறாக நான்கைந்து பல்லவர்கள் பிராகிருதப் பல்லவரெனக் குறிக்கப்படுகிறார்கள். அவர்களுள் சிவஸ்கந்தவர்மன் முக்கியமானவனாகக் காண்கின்றான். இவர்களைப்பற்றி மயிதவோலு சாசனம், ஹிரஹதகல்லி சாசனம், பிரிட்டிஷ் மியூசியம் சாசனம் என்ற மூன்றுமே விளக்கமாகக் குறித்துள்ளன. இவ்வாறு தமிழக வரலாற்றைக் குறிக்கும் முதற்சாசனங்கள் இவைகளே இவற்றின் வழி பப்பதேவன், சிவஸ் கந்தவர்மன், புத்தி தேவன், வீரவர்மன், விஷ்ணு கோபன் (கி.பி. 340) என்பவர்கள் முறையே ஆண்டதாக கோபாலன் அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.[1]

இடைக்காலப் பல்லவர் வடமொழிப் பல்லவராவர். இக்காலப் பல்லவரை அறிய அவர் காலத்தில் வடமொழியில் ஏற்படுத்தப்பட்ட பல செப்பேடுகளும் கல்வெட்டுமே துணைசெய்கின்றன. அச்செப்பேடுகள் பல பல்லவரால் வெளியிடப்பட்டவேனும், அவை காஞ்சியிலிருந்து வெளியிடப்பட்டதாகக் காணப்பெறவில்லை. அவை தவிர இரண்டொரு வடமொழி நூல்களும், பிற மன்னர் வெட்டுவித்த கல்வெட்டுக்களும்கூட இவர் வரலாற்றை அறியத் துணை புரிகின்றன. முறைப்படி இடைக்காலப் பல்லவருள் யார் யார் தொடர்ந்து ஆண்டார்கள் என்பதைத் திட்டமாகக் கூற இயலாது. எனினும், கோபலன், அவர்களை—அவர்தம்—அரசியலை ஒருவாறு முறைப்படுத்திக் காட்டியுள்ளார். முதல் பல்லவர் மரபின் இறுதி மன்னனான விஷ்ணுகோபனுக்குப் பின்பும் (அதாவது கி.பி. 350) ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட மகேந்திரன் தந்தையாகிய


  1. History of the Pallavas of Kanchi P. 33.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/190&oldid=1358561" இலிருந்து மீள்விக்கப்பட்டது