பக்கம்:தமிழக வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

193


யுற்றதோடு வீழ்ச்சியும் அடைந்தான். நரசிங்கன் சேனைத்தலைவராய் இருந்த பரஞ்சோதியார் புலிகேசியை அவன் தலை நகராகிய வாதாபிவரை துரத்திச் சென்று வாதாபியையும் கைக் கொண்டு வெற்றி பெற்றார். அப்பரஞ்சோதியாரே பெரிய புராணத்தால் ‘சிறுத் தொண்ட நாயனார்’ எனச் சிறப்பிக்கப்பட்ட பெரியாராவர்.

நரசிம்மவர்மன் கி. பி. 630 முதல் 668 வரை நீண்ட காலம் அரசாண்ட பெருமன்னன். அவன் காலத்திலும் பல போர்கள் நிகழ்ந்துள்ளன. சாளுக்கியருடனும், பாண்டியருடனும், கங்கருடனும், இலங்கை வேந்தனுடனும் அவன் பெரும்போர்கள் ஆற்றியுள்ளான். அவன் காலத்தில் தமிழ் நாட்டில் சேரரும் சோழரும் சிற்றரசர்களாய் இருந்திருப்பர். அவர்களைப்பற்றிய குறிப்புக்களே வரலாற்றில் இல்லை. எனினும், கடுங்கோன் பாண்டியனால் புதுப்பிக்கப்பெற்ற பாண்டிய மரபு தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. நரசிம்மன் காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னன் அரிகேசி பராங்குசன் என்பான். அவனே திருஞானசம்பந்தரால் கூன் நிமிர்த்த்ப் பெற்று ‘நின்ற சீர் நெடுமாறன்’ என்ற சிறப்புப் பெயர்பெற்றவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி சோழன் மகள் எனக் காண்கின்றமையின், சோழர் சிற்றரசர்களாய் வாழ்ந்து பாண்டியனுக்கு மகள் கொடுத்து, உறவு கொண்டாடி இருந்தனர் என அறியலாம். முன்னைய களப்பிரரில் ஒருவகையார் கொடும்பாளுரிலிருந்து ஆண்டு அப்பாண்டியனுக்கு அடங்கியிருந்தனர். அப்பாண்டியன் சமண சமயத்தைத் தழுவியவன். மனைவி மங்கையர்க்கரசியோ சைவசமயத்தைச் சார்ந்தவர். பின் திருஞானசம்பந்தரால் பாண்டிய நாடு முழுவதும் சைவமானபோது பாண்டியனும் சைவனானான். வடக்கே பல்லவரும்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/195&oldid=1358452" இலிருந்து மீள்விக்கப்பட்டது