பக்கம்:தமிழக வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

197


சீனிவாச ஐயங்கார் அவர்கள். எனவே, கலையையும் சமயத்தையும் ஒருங்கே வளர்த்தவன் நரசிம்மவர்மன்.[1]

பரமேச்சுரன்

நரசிம்மனுக்குப்பின் பட்டத்துக்கு வந்தவன் இரண்டாம் மகேந்திரன். அவன் நெடுங்காலம் ஆளவில்லை. பின் வந்த பரமேச்சுர வர்மன் கி.பி. 670 முதல் 685வரை ஆண்டான். இவன் காலத்திலும், சாளுக்கியரோடு போர்கள் நடைபெற்றன. இவன் காலத்தில் சாளுக்கிய வேந்தனாய் விக்கிரமாதித்தன் இருந்தான். அவனும் அவன் மகன் விநயாதித்தனும் பரமேச்சுரனுடன் போரிட்டனர் என்பர். இருசாராரும் தாம் தாம் வெற்றி கொண்டதாகவே கூறுகின்றனர். அவர்கள் இட்ட பெரு வளநல்லூர்ப் போர் பல்லவர் வரலாற்றிலேயே சிறந்த இடம் பெறுகின்றது எனலாம். அப்போரைப் பற்றிக் கூரம் பட்டயம் நன்கு வர்ணிக்கிறது. நூறாயிரம் வீரருடன் வந்த விக்கிரமாதித்தன் ஒண்டியாய்க் கந்தையைப் போர்த்துக்கொண்டு ஓடிப்போனான் என்கிறது கூரம் சாசனம்.

தெற்கே பாண்டி நாட்டில் நெடுமாறனுக்குப் பின் வந்த கோச்சடையன் அரசாண்டான். அவனும் சாளுக்கியருடன் போரிட்டதாக அறிகிறோம். இப்போரில் நெடுமாறன் மகனான கோச்சடையன் பங்கு கொள்ள நெய்வேலியில் போர் நடைபெற்றதாக வேண்டும் நெடுமாறன் அது காலை வாழ்ந்தவனாக வேண்டும். இப்போரைத்தான் சுந்தரர்,

‘பிறைகொண்ட சிந்தையால் நெய்வேலி கொண்ட

பின்ற சீர் நெடுமாறன்’[2]

  1. பல்லவர் வரலாறு-P.T. சீனிவாச ஐயங்கார்
  2. சுந்தரர் தேவராம், திருத்தொண்டத் தொகை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/199&oldid=1358513" இலிருந்து மீள்விக்கப்பட்டது