பக்கம்:தமிழக வரலாறு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

199


கோயில் இன்றளவும் தமிழ்நாட்டு வரலாறு எல்லைக் கல்லாய் இந்திய அரசாங்கத்தாரால் நன்கு பாதுகாப்பட்டுவருகிறது. அக்கோயிலை நேரில் சென்று காண்பார் அதன் கலைத்திறனை நன்கு உணர்வர். இமயத்து எல்லையில் உள்ள கயிலைமலைக்கு யாத்திரை சென்று வருபவர்கள். இக்கோயிலைக் கண்டு, இமயக் கயிலையை ஒத்தே இக்கயிலாயநாதர் கோயிலும் அமைந்துள்ளது என்பர். இக்கோயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் இம்மன்னன் இசை, நடனம் போன்ற கலைகளிலும் பிறகலைகளிலும் கொண்டிருந்த ஆர்வத்தை நன்கு எடுத்துக் காட்டுவன. இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுக்களும் உள்ளன. பெரிய புராணத்தில் திரு நின்றவூரில் பூசலார் கட்டிய மனக் கோயில் பற்றிய நிகழ்ச்சியில் காடவர்கோன் கட்டிய இக்கோயில் பற்றிய குறிப்பு வருகின்றது. மன்னன் இறைவனைக் கோயில் கொள்ளச்செய்த நாளும் பூசலார் மனக்கோயில் நாளும் ஒன்றாக அமைய இறைவன் மன்னனுக்கு வானொலிவழி நாளையே மாற்றச் சொன்னதாகப் பெரிய புராணம் கூறும். அம்மன்னன் இந்த இராசசிம்மனேயாவன். எனவே, இவன் சிறந்த சிவபக்தனாவான். இவன் வடமொழி, தமிழ் இரண்டிலும் வல்லவன். இவன் நாடகத்திலும் திறம் பெற்றவன். தண்டி அன்னும் வடமொழிப் புலவரை இவன் ஆதரித்தான் எனவே, வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளையும், இசை, நடனம், நாடகம், சிற்பம் முதலிய கலைகளையும் வளர்த்துச் சிறந்த சிவபக்தனாய் விளங்கியவன் இராசசிம்மப் பல்லவனாவன்.

புதிய மரபு:

இராசசிம்மனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் பரமேசுவரன் பட்டத்துக்கு வந்தான், அவன் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/201&oldid=1358524" இலிருந்து மீள்விக்கப்பட்டது