பக்கம்:தமிழக வரலாறு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

தமிழக வரலாறு


என்றாலும் அதில் அந்நாட்டு மக்களின் சமுதாய வாழ்வு நன்கு தெரிவதைக் காணலாம். பல்லவ மன்னர்கள் ஊர் தோறும் சென்று நல்லிடத்தை ஆய்ந்து கலைக்கோயில்கள் அமைத்தமையின் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகியிருப்பார்கள் என்று எண்ண இடமுண்டு. கலை வல்லநல்ல அறிஞர்களை நாடு முழுதும் தேடி அறிந்து கொண்டுவந்து, சிறந்த இடங்களில் கலைகளை வளர்த்தார்கள் என்பதை அறியும்போது அவர்கள் அக்கலைஞர்களோடு நன்கு பழகியிருக்க வேண்டும் எனக் கொள்ளல் வேண்டும். எனவே, மன்னன் மக்களோடு சாதாரணமாகக் கலந்து பழகி வாழ்ந்து நாட்டு நலம் புரந்து இன்பம் கண்டான் என அறியலாம்.

கலை மலிந்த காலம்:

அக்காலம் கலை மலிந்த காலம் எனக் கண்டோம். என்னென்ன கலைகள் அக்காலத்தில் வளர்ந்து சிறப்புற்றன. தேவாரம் போன்ற அக்கால இலக்கியங்களும் கோயில்களில் காணும் சிற்ப ஒவியங்களும், பிற அமைப்புக்களும் அந்தக் காலக் கலை நலத்தை நமக்கு விளக்கும். 'கல்வியே கரை இலாத காஞ்சிமா நகர்' என்று அப்பர் காஞ்சி நகரைக் குறிக்கின்றார் கற்றார் வாழ் காஞ்சியாக அது அந்தக் காலத்தில் விளங்கியது என்பது உண்மையன்றோ! அக்காலத்தே சீன நாட்டிலிருந்து வந்து காஞ்சியின் நலம் கண்ட சீன யாத்திரிகன் யுவான் சுவாங் அதன் கல்வியின் சிறப்பைப் பற்றிப் பாராட்டியுள்ளான். காஞ்சியில் உள்ள கைலாசநாதர் கோயிலும், வைகுண்டப் பெருமாள் கோயிலும், அவற்றில் உள்ள கலைச் சிற்பங்களும் பல்லவர் தம் பெருமையைப் பலபடப் பாடிக் கொண்டே இருக்கின்றன. காஞ்சியில் மட்டுமன்றிப் பல பேரூர்களிலும் சிற்றுார்களிலும் கல்வி நிலையங்கள் இருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/208&oldid=1376426" இலிருந்து மீள்விக்கப்பட்டது