பக்கம்:தமிழக வரலாறு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்லவர் காலத்துத் தமிழகம்

207


திருக்க வேண்டும் என்பது நாட்டு நிலையால் நமக்கு நன்கு விளங்குகின்றது. கல்வியேயன்றி, இசை, நாடகம் போன்ற கலைகள் நாட்டில் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதையும், சித்திரங்களும், பிற இசை நூல்களும் நன்கு காட்டுகின்றன. தேவாரத்தில் பலப்பல இசைக் கருவிகள் பேசப்படுகின்றன. சங்க காலத்தில் இருந்த குழலும் யாழும் தவிர்த்து வேறு எத்தனையோ வகையான இசைக் கருவிகள் இக்காலத்தில் வழக்கத்தில் உள்ளன.[1] நடன நிலையில் சிற்சில கல் உருவங்கள் செதுக்கி இருப்பதும், வண்ணங்கள் கொண்டு ஒவியங்கள் தீட்டி இருப்பதும் நடனக்கலை சிறந்திருந்தமைக்குச் சிறந்த சான்றுகளாகும் சில கோயில்களில் நடனமாடுவது போன்று பெருஞ் சிலைகள் காட்சியளிப்பதைக் கண்டு வியக்கத் தோன்றும். இயலும், இசையும், நாடகமும் கலந்த கல்வி முறை பல்லவர் காலத்தில் சிறந்து விளங்கியது என்பதை டாக்டர் மீனாட்சி அவர்கள் தம் நூலில் தெள்ளத் தெளியக் காட்டுகின்றார்.[2] பல்லவர்காலத்தில் கற்கள் கதை பேசின, இசை பாடின; தோகை விரித்தாடின, சுதி கூட்டின. இன்னும் இவ்வாறு எத்தனையோ வகையில் பாறைகளும் அவற்றில் குடைந்தெடுக்கப்பட்ட கற்களும் பல வகையில் பல்லவர் காலத்தில் கலைஞர்தம் செவ்விய கைவண்ணத் திறனால்-சிற்பியின் செயலாற்றும் முறையால் சிறந்து விளங்கின என்பதைத் தமிழ்நாட்டு வரலாற்றை எண்ணும் ஒவ்வொரு


  1. சல்லரி யாழ் முழவ மொந்தை குழல் தாளம தியம்ப-சம்பந்தர், தோணிபுரம்-2 கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கை படகம் -சம்பந்தர், திருவேதவனம்-5
  2. Administration & Social Life under Pallavas, by Dr. Meenakshi.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/209&oldid=1376421" இலிருந்து மீள்விக்கப்பட்டது