பக்கம்:தமிழக வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது வரலாறு?

19


பற்றியும், சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களைப் பற்றியும், பிற்கால அரசர்களைப் பற்றியும்—ஆம்—சேர சோழ பாண்டிய பல்லவ அரசர்களைப் பற்றியும்—எழுதி வைத்துப் பின்வந்த வேற்று நாட்டுப் படையெடுப்புக்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காட்டி அமைதியுறுவர். பழங்கால வரலாறு என்று கல்லூரியில் பயிலும் மாணவர் பழைய கிரேக்க உரோம நாட்டு அரசர் தம் பரம்பரைகளைப் பற்றியே பெரும்பாலும் பயிலுவர். இவ்வாறு வரலாறு என்பது மன்னர் வாழ்வை விளக்குவதுதான் என்ற எண்ணம் இடைக்காலத்தில் வரலாற்று ஆசிரியர் தம் உள்ளத்தில் உருவாகிவிட்டது. ஆனால் உண்மையில் வரலாறு அந்த அளவில் முற்றுப் பெறுவதன்று. அந்நிலை வரலாற்றுக்கு அடிப்படையாக அமையுமேயன்றி, அதுவே வரலாற்றின் முடிந்த எல்லை ஆகாது. இதை இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஒரளவு உணர்ந்துள்ளார்கள். தமிழ்நாட்டு வரலாற்றை எழுத முற்பட்ட P. T. சீனிவாச ஐயங்கார், நீலகண்ட சாஸ்திரியார் போன்ற ஆசிரியர்கள் இவ்வுண்மையை உணர்ந்து உணர்த்தியதோடு தம் வரலாற்று எழுத்துக்களையும் அரசர் பரம்பரையை விளக்கும் அளவோடு நிறுத்திவிடவில்லை.

“வரலாறு என்பது அரச குடும்பத்தின் உயர்வு தாழ்வுகளைக் கூறுவதாயும், மாற்றார் என்று பகைவரைக் கற்பித்துக்கொண்டு அவர்தம் நாட்டின் மேல் படையெடுத்து ஈவு இரக்கமின்றி மக்களைக் கொன்று குவிக்கும் போர் நிலையை விளக்குவதாயும், மாற்றார் நாட்டை எரியூட்டி மக்கள் வாழ்வை நாசமாக்கி அரச மகளிரையும் பிற பெண்களையும் கற்பழிக்கும் சீர்கேடுகளைக் கூறுவதாயும், அமைதி வாழ்வைக் குலைத்து அசுர வாழ்வில் கொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/21&oldid=1375613" இலிருந்து மீள்விக்கப்பட்டது