பக்கம்:தமிழக வரலாறு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழக வரலாறு


சான்று பகர்கின்றன. நிலமும் ஒழுங்காக அளக்கப் பெற்றுத் தரத்திற்கு ஏற்ப வரி விதிக்கப் பெற்றிருந்தது சில ஊர்கள் தானமாகக் கொடுக்கப்பெற்று வரிவிலக்கு அளிக்கப் பெற்றன. நிலவரியே யன்றிப் பல்லவர் காலத்தில் பல்வேறு வரிகள் நாட்டில் இருந்தன. நீர்ப்பாசன வசதிகள் கெடாது நிலைத்த வகையில் உதவப் பல ஏற்பாடுகள் செய்யப் பெற்றன. நீட்டல், முகத்தல், நிறுத்தல் போன்ற அளவை வகைகளும் செப்பம் செய்யப்பெற்று இருந்தன. பல்லவர் காலத்தில் நாணயங்கள் நன்கு புழக்கத்தில் வந் துள்ளன. அவை ‘நந்தி’ முத்திரையிட்ட காசுகளாய் இருந்தன. அத்துடன் அரசர்தம் சிறப்புப் பெயர்களையும் அவை தாங்கி நின்றன போலும்! இவ்வாறு பல்லவர், மக்களுக்குப் பல்வேறு வகையில் பொருளாதாரம் வளர்ச்சிபெறும் வகையில் உதவி வாழ்ந்தார்கள்.

இலக்கிய வளர்ச்சி:

பல்லவர் காலத்தில் கல்வியும் கலைகளுங்கூட வளர்ச்சியுற்றன. பல்வேறு இடங்களில் பல்லவர் தீட்டியுள்ள ஓவியமும் செதுக்கியுள்ள சிற்பமும் அவை அக்காலத்தில் இருந்த ஏற்றத்தையே எடுத்துக் காட்டுகின்றன. இன்றும் அவை அழியா வகையில் நம்முன் நின்று பல்லவரை வாழ்த்துகின்றன. காஞ்சியிலும் பாகூரிலும் பல்லவர் வடமொழிக் கல்லூரிகளை அமைத்திருந்ததையும் காண்கின்றோம். பிராமணர்களுக்கு ஊர்களைத் தானம் செய்து வடமொழியை நன்கு வளர்த்தனர் ஆதி பல்லவர். எனினும் பிற்காலப் பல்லவர் தமிழ்மொழியையும் நன்கு வளர்த்தனர் எனலாம். அவர்கள் காலத்திலே தான் தேவாரம், பிரபந்தம் போன்ற இலக்கியங்களும், யாப்பி லக்கண அணி இலக்கண நூல்களும், பாரத வெண்பா, நந்திக் கலம்பம் போன்ற இலக்கிய நூல்களும், சிவத்தளி வெண்பா முதலிய சமய நூல்களும், பிற தமிழ் இலக்கியங்களும் தோன்றின.

இன்னும் இசை, நடனம், நாடகம் பற்றிய சிறு சிறு நூல்கள் தோன்றிய காலமும் அதுவே. இசையையும், நட-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/212&oldid=1358583" இலிருந்து மீள்விக்கப்பட்டது