பக்கம்:தமிழக வரலாறு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

XIII பிற்காலச் சோழர் எழுச்சி

I

இராசராசனுக்கு முன்

அறிய உதவுவன:

இலக்கியங்களைக் கொண்டு ஆராய்ந்த வகையில் சங்க காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் சிறந்த காலம் என அறிந்தோம். சங்க காலத்துக்குப் பின் பல்லவர் ஆட்சியில் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது என்பதும் வரலாற்று உண்மையாகும் எனினும், அவற்றிற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டு வரலாற்றிலேயே எல்லா வரலாற்று மூலங்களும் நன்கு எடுத்துக் காட்டிய ஒரு சிறந்த காலம் இப்பிற்காலச் சோழர் காலமேயாகும். இக்காலத்தில் எழுந்த கல்வெட்டுக்கள் கணக்கில. நினைக்க முடியாத அளவில் பெரும் பெருங்கோயில்கள் எழுந்த இக்காலத்தில், கோயில் மதிற் சுவர்களெல்லாம் வரலாற்றைக் கூறும் ஏடுகளாக மாறிவிட்டன. பல்லவர் காலத்தில் மன்னவர்களே பட்டயங்கள் ஏற்படுத்திக் கொண்டது போல அன்றிப் பாமரரும் பிறருங்கூட இக்காலத்தில் கல்வெட்டுக்கள் வெட்டி வைத்துள்ளனர். ஒரு சிறு தானத்துக்குங்கூடத் தானம் சாசனம் உண்டு. அந்தத் தானத்தைக் கொடுத்தவன் கோயில் மதிற்சுவரில் அத்தானத்தைப் பற்றியும், அதைச் செயலாற்ற வேண்டிய முறை பற்றியும், அத்தானத்தைச் செய்யத் தவறினால் வரும் தீங்கு பற்றியும் குறித்திருப்பான். அவற்றிற்கெல்லாம் முன்னாக அத்தானம் செய்யப்பட்ட ஆண்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/214&oldid=1376418" இலிருந்து மீள்விக்கப்பட்டது